ஜின்னாஹ் ஷரிபுத்தீன். கொழும்பு: Pearl Island Readers, 2வது பதிப்பு, 2011, 1வது பதிப்பு, 2003. (ஹோமகம: கருணாரத்தின அன் சன்ஸ், Unit 67, UDA Industrial Estate, Katuvana Road). 12 பக்கம், சித்திரம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×15 சமீ., ISBNN: 955-597-898-0. கொழும்பு பிரிட்டிஷ் கவுன்சிலின் வேலைத்திட்டத்தின் கீழ் DFID அமைப்பின் நிதி உதவியுடன் வெளியிடப்பெற்றுள்ள இந்நூல், இலங்கைப் பாடசாலைகளில் அடிப்படை கல்விகற்கும் சிறார்களுக்கான உப வாசிப்பு நூல்களாக தமிழ் சிங்கள மொழிகளில் வெளியிடப்பெற்ற 54 சிறுவர் நூல்களில் ஒன்றாகும். இக்கதையில் உணவைக் களவெடுத்துச் சாப்பிட்டு வந்த ஒரு பூனை இறுதியில் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றது.