செ.யோகநாதன். தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, 2001. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி). 40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955- 97520-0-6. சிறுவர்க்குரிய நற்பழக்கங்கள், பொது அறிவுக்குரிய செய்திகள், அநீதியை எதிர்த்தல் முதலிய கருத்துக்கள் செறிந்த கதை. நற்பழக்கங்கள் கொண்ட கண்ணன் பொலிசாரின் கண்ணில் படாதிருந்த ஏழு திருடர்களை தந்திரமாகப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து இரண்டுலட்சம் ரூபா பரிசினைப் பெறுகின்றான். கண்ணனும் அவனது நண்பர்களான பாரதியும் பாபுவும் மிகச் சிறந்த மாணவ மணிகளென்ற விருதுகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29082).
14148 நல்லைக்குமரன் மலர் 2005.
நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2005. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 160 + (54) பக்கம், புகைப்படங்கள்,