14537 பிங்கலன் கதை.

நவாலியூர் சோ.நடராசன். கொழும்பு 11: எம்.டி.குணசேனா, 217, ஒல்கொட் மாவத்தை, 1வது பதிப்பு, 1971. (கொழும்பு 11: எம்.டி.குணசேனா, 217, ஒல்கொட் மாவத்தை). xi, 84 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. பிங்கலன் என்ற குரங்கின் கதை இது. ஆசிரியர் முன்னர் எழுதிய வினோதனின் சாகசம் என்ற சிறுவர் நாவலின் தொடர்ச்சியாக அமைவது. அதிலுள்ள பாத்திரங்களில் சிலவும் இந்நாவலில் வருகின்றன. பிங்கலன் என்ற சிறு குரங்கு பல வீரதீரச் செயல்களைச் செய்து கடைசியில் உலகச் சுற்றுப்பயணமும் மேற்கொள்கின்றது. பிரயாணக்கட்டுரைகூட எழுதுகிறார். ஆனால் பாவம் அவருக்கு அழகையும் பெருமையையும் கொடுத்த வாலைத்தான் அவர் இழந்து விட்டார். கிம்பலன் தாத்தாவின் கூத்தை தனது நண்பர்களுக்கு காட்டப்போய் தனது அழகான திருவாலை இழந்து அவதிப்படுகிறார். ஆயினும் வாலில்லாமலே பல ஆபத்துக்களையும் கடந்து செல்கிறார். இவர் செய்யும் குறும்புகளைப் படிப்பவர்களுக்கு இது ஒரு குரங்கின் செயலா என்று ஆச்சர்யத்தை ஏற்படுத்தவும் கூடும். திருடனின் சட்டைப் பையிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பி அதே சடடைப்பையில் ஒரு பூனையை லாவகமாக அடைத்துவிட்டு ஓடிய பிங்கலனின் சாமர்த்தியத்தைக் கதையில் காணலாம். இத்தகைய வீரச் செயல்களினால் அவர் பின்னர் மகாராஜா பதவியைக்கூட அடைகின்றார். நகைச்சுவை நிரம்பிவழிய எளிய நடையில் தமிழில் பிங்கலனின் கதை எழுதப்பட்டுள்ளது. காட்டில் நடக்கும் இக்கதையைப் படிக்கும் சிறார்களையும் காட்டுக்கே அழைத்துச் சென்று விடுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

12719 – சதுரங்கத்தின்அடிப்படைகளும் தொடக்க முறைகளும்.

சி.வித்தியாதரன். யாழ்ப்பாணம்: ஹரி கஸ்பரோவ் சதுரங்க அக்கடமி (புயசசல முயளியசழஎ ஊhநளள யுஉயனநஅல)இ ழே.5, வைமன் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 2005. (யாழ்ப்பாணம்: சிமாட் பிரின்டர்ஸ், இல. 717 காங்கேசன்துறை வீதி).

14463 வாழ்வை காக்கும் தகவல்கள் 2004.

ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம். ஐக்கிய அமெரிக்கா: யுனிசெவ், 3 யூ.என்.பிளாசா, நியுயோர்க் NY 10017, 2வது பதிப்பு, 2004, 1வது பதிப்பு, ஜனவரி 1991. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை). xvii, 172

14056 வெசாக் சிரிசர 2004.

ராஜா குருப்பு (பதிப்பாசிரியர்), த.கனகரத்தினம் (உதவிப் பதிப்பாசிரியர்). கொழும்பு 7: வெசாக் சிரிசர வெளியீட்டுக் குழு, அரச சேவைகள் பௌத்த சங்கம், 90/15, வீரவ பிளேஸ், றாகம வீதி, கடவத்தை, 1வது பதிப்பு, மே

12579 – ஆரம்ப விஞ்ஞானம்: 7-1.

இ.குணநாதன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: திசர அச்சகம், 135, தட்டுகமுனு வீதி, தெகிவளை). vii, 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: