எம்.பாலகிருஷ்ணன். கொழும்பு 10: Books Prishanmi, 33-B, N.H.S.Siri Dharma Mawathe, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2000. (கொழும்பு: ஏ.எஸ். டெஸ்க் டொப் பப்ளிஷிங் சென்டர்). (2), 22 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 30.00, அளவு: 25×18.5 சமீ. சிறுவர்களுக்கு உகந்த வகையில் விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ள இந் நெடுங்கதை ஆத்தர் தான் செய்திருப்பான், ஆத்தரும் கோயில் மணியும், ஆத்தரின் படபடக்கும் கடிதவுறை, வேலியோரம் நடமாடும் தீச்சுடர், மாயமாய் மறைந்த சூனியச் செம்பு, மந்திரவாதியின் தலையைத் தாக்கிய மாயச்செம்பு ஆகிய ஆறு அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 29173).