14541 நீலமும் பசுமையும் நிறைந்த நல்ல உலகம்.

உடுவை எஸ்.தில்லை நடராஜா. கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு, 248, 1/1 காலி வீதி, 1வது பதிப்பு, மார்கழி 2016. (கொழும்பு 6: விகடன் அச்சகம், 541/2C, காலி வீதி). vi, 138 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 29.5×21 சமீ., ISBN: 978- 955-9233-44-2. இயற்கையை நேசித்து சமாதானத்தை மதித்து மனிதப் பண்புகளை உருவாக்கும் வகையில் வளர் இளம் பருவத்தினருக்கு அறிவூட்டும் ஆக்கங்களை உள்ளடக்கிய நூல். நீலமும் பசுமையும் நிறைந்த நல்ல உலகம், அந்திநேர நிலவொளியில் அழகான கடலோரம், அப்பனின் வீட்டுத் தோட்டம், ஒவ்வொரு துளி தண்ணீரும் பெறுமதியானது, வளங்களைப் பயன்படுத்தலும் நல்ல பழக்கங்களை வழக்கப்படுத்தலும், மரங்களை நாட்டி வளர்ப்பதால் மக்கள் பெறும் பயன்கள் பலப்பல, ஆடிப்பாடிப் பேசிக் கதைத்து ஆனந்தம் தரும் உயிரினங்கள், மனங்களைக் கவர்ந்து உடலைக் குளிரவைக்கும் எழிலான மலையகம், வளங்கள் நிறைந்துள்ள வனாந்தரக் காடுகள், அழகான ஊரில் ஆனந்தமான வாழ்வு, காட்டில் வாழும் வானில் பறக்கும் தரையில் ஊரும் நீரில் நீந்தும் உயிரினங்கள் நல்ல நண்பர்கள், உலகம் முழுவதும் சமாதானமும் அமைதியும் ஆகிய 12 கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு கட்டுரையின் தொடக்கத்திலும் சிந்தனையைத் தூண்டும் பொன்மொழிகள் ஒவ்வொன்றும், கட்டுரைகளின் இறுதியில் அக்கட்டுரை தொடர்பான வினாக்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

14592 ஒரு நதியின் தேடல்.

கு.றஜீபன். யாழ்ப்பாணம்: சிதம்பரப்பிள்ளை சின்னத்தம்பி நினைவுமலர்க் குழு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்மார்ட் பிரின்ட்ஸ், 717, காங்கேசன்துறை வீதி). (4), 24 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×10.5

12650 – தமிழ்த் தட்டெழுத்து: தொடுகைமுறைப் பயிற்சி வழிநூல்.

சே.சிவசுப்பிரமணிய சர்மா. சுன்னாகம்: சே.சிவசுப்பிரமணிய சர்மா, கந்தரோடை, 1வது பதிப்பு, மே 1964. (கல்லச்சுப் பிரதியாக வெளிவந்த நூல்). (28), 11+19 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 16×20 சமீ. கல்லச்சுப் பிரதியாக