14543 இலக்கியத் தொகுப்பு: க.பொத.(உ.த.) தமிழ் 1.

தேசிய கல்வி நிறுவகத் தமிழ் மொழித்துறை. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 1997. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 242 பக்கம், விலை: ரூபா 65.00, அளவு: 21×14 சமீ. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தேர்வுக்கான தமிழ் இலக்கிய பாடத்திட்டத்துக்கு அமைவாக 1997ஆம் ஆண்டும் அதன் பின்னரும் நடைபெறும் உயர்தர பரீட்சைகளுக்குப் பயன்படுத்தக்கூடியதாக எழுதப்பட்டுள்ள பாடநூல். இத்தொகுப்பின் ஆக்கத்திற்கு மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் தமிழ் மொழித் துறையினர் இயங்கியுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட செய்யுள்கள், திருக்குறள்-ஒழிபியல், கம்பராமாயணம், உரைநடைத் தொகுப்பு, புனைகதை, பாரதி பாடல்கள் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் இந்நூல் பாடங்களை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 34747).

ஏனைய பதிவுகள்

14938 பேராசிரியர் எம்.ஏ.நுஃமானும் மொழியியலும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 52 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14 சமீ.,

12194 – ஸலவாத்துன் நபி.

எம்.ஏ.ஸெய்யித் முஹம்மத். காத்தான்குடி 3: ஸலவாத் மஜ்லிஸ், இஸ்மாயில் ஹாஜியார் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 1994. (மட்டக்களப்பு: ஆனந்தா அச்சகம்). 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. அல்லாஹ்வின் தூதர்

12622 – போசாக்குக் கைந்நூல்.

. ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்). கொழும்பு: கொள்கை திட்டமிடல், அமுலாக்கல் அமைச்சு, சௌக்கிய அமைச்சு, 1வது பதிப்பு, ஜுன் 1994. (கொழும்பு: குணரத்ன ஓப்செட் லிமிட்டெட்). (4), 101 பக்கம், விலை:

12024 – அன்புள்ள தம்பிக்கு 1000 உபதேசங்கள்.

அராலியூர் வி. செல்வரத்தினம். வட்டுக்கோட்டை: செல்வி வி.திருவருட்சோதி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, சித்திரை 2017. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், பண்டத்தரிப்பு). viii, 91 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250.,

14303 இலங்கை மத்திய வங்கி 1950-1975: நினைவு மலர்.

மலர்க்குழு. கொழும்பு 1: இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட திருவாளர்கள் எற்கின் ஸ்பென்ஸ் கூட்டுநிலையம்). (32), 92 பக்கம், அட்டவணைகள், தகடுகள், விலை:

14573 இராப்பாடிகளின் நாட்குறிப்பு.

தி.வினோதினி. மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). 105 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.,