தேசிய கல்வி நிறுவகத் தமிழ் மொழித்துறை. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 1997. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 242 பக்கம், விலை: ரூபா 65.00, அளவு: 21×14 சமீ. கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தேர்வுக்கான தமிழ் இலக்கிய பாடத்திட்டத்துக்கு அமைவாக 1997ஆம் ஆண்டும் அதன் பின்னரும் நடைபெறும் உயர்தர பரீட்சைகளுக்குப் பயன்படுத்தக்கூடியதாக எழுதப்பட்டுள்ள பாடநூல். இத்தொகுப்பின் ஆக்கத்திற்கு மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் தமிழ் மொழித் துறையினர் இயங்கியுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட செய்யுள்கள், திருக்குறள்-ஒழிபியல், கம்பராமாயணம், உரைநடைத் தொகுப்பு, புனைகதை, பாரதி பாடல்கள் ஆகிய ஆறு பிரிவுகளின்கீழ் இந்நூல் பாடங்களை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 34747).