செ.நடராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 4வது பதிப்பு, மாசி 1981. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63 B.A. தம்பி ஒழுங்கை). (4), 1-97 பக்கம், விலை: ரூபா 6.75, அளவு: 20×14 சமீ. இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ள காட்சிப் படலம், க.பொ.த.ப. சாதாரணதரம், தமிழ்மொழி “அ” பாடத்திட்டத்திற்கேற்ற வகையில் தயாரிக்கப்பட்டது. இப்பாடற் பகுதிக்குக் கொண்டுகூட்டு (எண்வகைப் பொருள்கோளுள் செய்யுளின் அடிகள் பலவற்றிலும் உள்ள சொற்களைப் பொருளுக்கு ஏற்றவிடத்தில் எடுத்துக்கூட்டிப் பொருள்கொள்ளுமுறை), பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை, விஷயத் தொகுப்பு என்பன அமைய மாணவர்கள் இலகுவில் விளங்கக்கூடியவகையில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. மேலும் செய்யுள் நயமும், உவமான உவமேய விளக்கங்களும் விரிவாகத் தரப்பட்டுள்ளன. பொருள்நிலைக்குப் பொருத்தமாக விடயங்களைத் தொகுத்து ஏற்ற தலையங்கங்கள் தந்து பண்டிதர் செ.நடராஜா இந்நூலை எழுதியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14861).