தம்பிஐயா தேவதாஸ். கொழும்பு 13: வித்தியாதீபம் பதிப்பகம், 90/9, புதுச்செட்டித் தெரு, 1வது பதிப்பு, ஜனவரி 1998. (கொழும்பு 12: Sharp Graphics Limited, D.G.2, Central Road). vi, 56 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 20×13.5 சமீ. ஆசிரியர் தம்பிஐயா தேவதாஸ் இந்நூலில் புதுமைப்பித்தன் எழுதிய “ஒரு நாள் கழிந்தது”, கு.ப.ராஜகோபாலன் எழுதிய “கனகாம்பரம்”, கு.அழகிரிசாமி எழுதிய “தவப்பயன்”, இலங்கையர்கோன் எழுதிய “வெள்ளிப் பாதசரம்”, சி.வைத்திலிங்கம் எழுதிய “பாற்கஞ்சி” ஆகிய சிறுகதைகள் பற்றியும், ஆர்.சண்முகசுந்தரம் எழுதிய “நாகம்மாள்” நாவல் பற்றியும் தனது திறனாய்வுக் கருத்துக்களை வழங்கியிருக்கிறார். இந்நூலாசிரியர் கொழும்பு, கொள்ளுப்பிட்டி மெதடிஸ்த தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் க.பொ.த உயர்தர தமிழ்மொழி மாணவர்களின் பயன்பாட்டுக்கென எழுதியிருந்த நூல் இதுவாகும். க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்காக புனைகதை இலக்கியங்கள், பாடவிதானக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டு பாடவிதானத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை தமிழ்ப் பாடவிதானத்தில் முக்கிய திருப்பமாகும். அவ்வகையில் தமிழகப் படைப்பாளியான “நாகம்மாள்” நாவல் பாடவிதானத்தின் முக்கிய இடத்தினை வகித்துள்ளது. இந்நாவல் முழுவதும் கிராமிய மணம் கமழ்ந்த, இலக்கியப் பிரவாகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. கொங்குநாட்டுக் கிராமியமக்கள் வாழ்க்கையை பேச்சுத் தமிழில் பல நாவல்களில் பதித்த பெருமைக்குரியவர் இந்திய எழுத்தாளர் ஆர்.ஷண்முகசுந்தரம். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24387).