14553 ஜீவநதி தை 2011: சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு-2011.

க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, தை 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 72 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 24.5×17.5 சமீ. “ஜீவநதி” யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. மூத்த எழுத்தாளர்களினதும் இளைய தலைமுறையினரதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், அரங்குசார் ஆய்வுக் குறிப்புகள், நூல்மதிப்புரைகள், நூல் அறிமுகங்கள் முதலிய பல உள்ளடக்கங்களைக் கொண்டு பிரசுரமாகின்றது. தை 2011இற்குரிய 28ஆவது இதழ் கொழும்பில் நடைபெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டையொட்டி சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழில் தமிழில் சிறுவர் இலக்கிய வளர்ச்சி (சபா.ஜெயராஜா), இலங்கையில் தேசியம்: மாறிவரும் சிந்தனைகள்- ஈழத்துத் தமிழ்க் கவிதைகளினூடான ஒரு தேடல் (ம.இரகுநாதன்), சங்க இலக்கியங்களை எவ்வாறு அணுகுவது (அம்மன்கிளி முருகதாஸ்), சைவ சமய இலக்கிய வரலாறு ஒரு பார்வை (க.அருந்தவராஜா), தெணியான் அவர்களுடனான நேர்காணல் (க.பரணீதரன்), நீரும் பண்பாடும் (செல்லையா கிருஷ்ணராஜா), தமிழ் நாவல் வரலாற்றில் அசன்பே சரித்திரம்: சில அவதானிப்புகள் (செ.யோகராசா), பயிலரங்க படைப்பு இலக்கியம்: அனுபவப் பகிர்விற்கான மகாநாடு (லெ.முருகபூபதி), நிறம் மாறும் உயிருள்ள சிற்பம் (க.ரதிதரன்), கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைகள்: ஓர் ஆய்வு நோக்கு (ஈஸ்வரநாதபிள்ளை குமரன்), மனதைக் கவரும் “மைனா”- தமிழ்த் திரையுலகில் ஆரோக்கியமான மாற்றங்கள் (ச.முருகானந்தன்), சிங்கள நாவல் இலக்கியத்தின் தோற்றமும் அதன் சமூகப் பின்னணியும் (சாமிநாதன் விமல்), ஜெயகாந்தன் பரிச்சயமும் பணிவான வந்தனங்களும் (கெக்கிராவ ஸஹானா) ஆகிய படைப்பாக்கங்களும் வழமையான கதை, கவிதைகள், தொடர்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொதுசன நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் A 647).

ஏனைய பதிவுகள்

12153 – திருவெம்பாவை-திருவம்மானை: மூலமும் உரையும்.

தமிழவேள் க.இ.கந்தசாமி (உரையாசிரியர்). கொழும்பு 6: விஜயலட்சுமி புத்தகசாலை, 248, காலி வீதி வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி). 50 பக்கம்,

12575 – விளங்கி எழுதுவோம் வாசிப்போம்-II : மேலதிக மொழி விருத்திப் பாடநெறி-தமிழ்.

M.H. யாகூத், பீ.சிவகுமாரன். கொழும்பு: தொலைக்கல்வித் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1997. (கொழும்பு:P and A பிரின்டர்ஸ் லிமிட்டெட்). 44 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ. தாய்மொழியல்லாத

14646 மனித விழுமியப் பாடல்கள்.

கல்வயல் வே.குமாரசாமி. சாவகச்சேரி: கல்வயல் வெ.குமாரசாமி நினைவு மலர், 1வது பதிப்பு, ஜனவரி 2017. (சாவகச்சேரி: திருக்கணித பதிப்பகம்). 28 பக்கம், புகைப்படம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ. 2016இல் இல்

14946 பேராசிரியர் கணபதிப்பிள்ளையும் நாடகமும்/பேராசிரியர் சு.வித்தியானந்தனும்நாட்டார் வழக்காற்றியலும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 40 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ.,

12689 – இசையியல் விளக்கம்: 3ம் பாகம்.

மீரா வில்லவராயர். மொரட்டுவை: மீராவில்லவராயர், 21B 2ஃ1 , 1வது பதிப்பு, 2003. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, E.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 159 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு:

12050 – இலங்கையில் கற்புடைமாதர் வழிபாடு.

க.இ.குமாரசாமி (தொகுப்பாசிரியர், புனைபெயர்: கோவைக்கிழார்). கோப்பாய்: க.இ.குமாரசாமி, அரவிந்த வாசம், கிளுவானை வீதி, 1வது பதிப்பு, 2005. (அச்சக விபரம் தரப்படவில்லை). viii, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ. இலங்கைத்