க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஆடி 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 48 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 60., அளவு: 25.5×18 சமீ. “ஜீவநதி” யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இச்சஞ்சிகையின் 34ஆவது இதழில், வெலிப்பன்னை அத்தாஸ், வெலிகம ரிம்ஸாமுகம்மத், அல்வாயூர் சி.சிவநேசன், அபிஷேகன், இ.ஜீவகாருண்யன், தியத்தலாவ எச்.எவ்.ரிஸ்னா, ஈழத்துக்கவி, நாச்சியாதீவு பர்வீன், த.ஜெயசீலன், எல்.வஸீம் அக்ரம் ஆகியொர் எழுதிய கவிதைகளும், சபா.ஜெயராசா (அமைதியின் சுவாலை), இ.இராஜேஸ்கண்ணன் (இரகசியமாய் கொல்லும் இருள்), கே.எஸ். சிவகுமாரன் (உறைவிடம் மேலிடம்), ச.முருகானந்தன் (விலகிடும் திரைகள்) ஆகியோரின் சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் இவ்வுளவியல் சிறப்பிதழில் உறவுப் பிரச்சினைகளுக்கான மனக் காரணிகள் (இராசேந்திரம் ஸ்ரலின்), தற்கொலை ஓர் உள சமூக நோக்கு (கு.கௌதமன்), வன்முறையற்ற தொடர்பாடல் (வி.மேனகா), குற்ற உளவியல் பற்றிய எண்ணக்கருக்கள் (க.பரணீதரன்), சிகிச்சை உளவியல் சில குறிப்புக்கள் (எஸ்.பார்வதி), விமர்சனங்களை எதிர்கொள்வது எப்படி (எம்.கே.முருகானந்தன்), ஆளுமை விருத்திக்கு வழிகாட்டும் சுயபிரதிமை (ப.தனபாலன்), எனது இலக்கியத் தடம் (தி.ஞானசேகரன்), கட்டிளமைப் பருவம் (ம.சுதர்சன்), முதுமை பருவத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் (அர்ச்சுனன்), மட்டு மீறிய உடற்பருமன் (எ.தர்மராஜா) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொதுசன நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 529).
12797 – ஒரு வெளிநாட்டுத் தாயின் வாழ்க்கை: சிறுகதைகள்.
வண்ணை தெய்வம் (இயற்பெயர்: தெய்வேந்திரன்). சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை 94: ஆதிலெட்சுமி பிரிண்டர்ஸ்).