க.பரணீதரன் (பிரதம ஆசிரியர்). பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஒப்டோபர் 2011. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 68 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 80., அளவு: 24×17.5 சமீ. “ஜீவநதி” யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. இச்சஞ்சிகையின் 37ஆவது இதழில், பவளவிழா காணும் கே. எஸ். சிவகுமாரன் (க.பரணீதரன்), கே.எஸ். சிவகுமாரனின் எழுத்துக்கள் (சோ.சந்திரசேகரம்), கே.எஸ்.சிவகுமாரன் சில குறிப்புகள் (எம்.ஏ.நுஃமான்), இலக்கியத் திறவுகோல் கே. எஸ். சிவகுமாரன் (ஏ. இக்பால்), நன்றியுடன் நினைவுகூர்தல் (அ.யேசுராசா), பதிவு இலக்கியத்தின் முன்னோடி (அந்தனி ஜீவா), கே.எஸ்.சிவகுமாரனின் படைப்புலகம் (மேமன்கவி), ஒலிபரப்பாளர் கே.எஸ்.சிவகுமாரன் (தம்பிஐயா தேவதாஸ்), பன்முக ஆளுமை கொண்ட கே.எஸ் சிவகுமாரன் எம்மவருக்குக் கிடைத்தற்கரிய பொக்கிஷம் (எஸ்.விஸ்வநாதன்), தாழ்வு மனப்பான்மை (கே.எஸ். சிவகுமாரன்), கே.எஸ்.சிவகுமாரனின் நான்கு கவிதைகள், பல்துறை வல்லுநர் கே.எஸ்.சிவகுமாரன் (சாந்தன்), கே.எஸ்.சிவகுமாரன் எனும் பன்முக ஆளுமை (நாச்சியாதீவு பர்வீன்), உற்சாகத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் கே.எஸ். சிவகுமாரன் (எஸ்.தில்லைநாதன்), அநுராதபுர பிரதேச இலக்கிய நேசமும் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களும் (வஸீம் அக்ரம்), கே.எஸ்.சிவகுமாரன் ஒரு பன்முக ஆளுமை (வ.மகேஸ்வரன்), கலை இலக்கிய உலகில் கே.எஸ்.சிவகுமாரன் (மு.சிவலிங்கம்), கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் (சபா. ஜெயராசா), நடுநிலையாளர் (வெலிப்பன்னை அத்தாஸ்), கே.எஸ்.சிவகுமாரனும் ஈழத்து விமர்சன வளர்ச்சியும் (செ.யோகராசா), சிவகுமாரன் என்னும் தனித்துவமான ஆளுமை (தெணியான்), கைலாயர் செல்லநயினார் மகனின் இன்றைய இடம் நாளை வெற்றிடம்? (மானா மக்கீன்), இளம்குமரன் கே.எஸ்.சிவகுமாரன் (வதிரி. சி.ரவீந்திரன்), அகவை எழுபைத்தைந்தில் கால் பதிக்கும் கே.எஸ்.சிவகுமாரன் (ஏ.என்.கிருஷ்ணவேணி), பவளவிழா காணும் ஒலிபரப்பாளர் கே.எஸ்.சிவகுமாரன் (ஊரெழு அ.கனகசூரியர்), இருமை (கே.எஸ்.சிவகுமாரன்), விமர்சனத்துறை ஜாம்பவான் கே.எஸ்.சிவகுமாரன் (அன்புமணி), கலா விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனும் கலை இலக்கிய ஈடுபாடுகளும் ஓர் அவதானிப்பு (கனகசபாபதி நாகேஸ்வரன்), இலையுதிர்காலமும் கதிர் பொறுக்கும் பெண்ணும் புதுக்கவிதைப் போராளியும் (சண்முகம் சிவலிங்கம்), பவளவிழா கண்டு வாழ்க (புலோலியூர் வேல். நந்தன்), விமர்சனத்துறையில் கே.எஸ்.சிவகுமாரனின் பங்களிப்பு (க.தங்கேஸ்வரி), கே.எஸ்.சிவகுமாரனின் “ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களும் ஒரு பன்முகப்பார்வை” பாகம் I, பாகம் II” ஒர் விமர்சனப் பார்வை (இ. இராஜேஸ் கண்ணன்), வாழும் தகவற் களஞ்சியம்: “பத்தி” எழுத்துத் தொகுப்பு நூலொன்றினூடான ஒரு தரிசனம் (த.கலாமணி), வார்த்தைகள் (கே.எஸ்.சிவகுமாரன்), நூல் விமர்சனம்: கே.எஸ்.எஸ்ஸின் சொன்னாற்போல 1, 2, 3…(மன்னார் அமுதன்), நூல் விமர்சனம்: காலக் கண்ணாடி ஊடாக கலை இலக்கிய உலகை நோக்கும் கே.எஸ். சிவகுமாரன் (எம்.கே. முருகானந்தன்), 25 படைப்பாளிகளின் ஜீவநதி சிறுகதைகள் (தொகுதி 1) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம் பொதுசன நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் P 647).
Golden Fish tank Harbors Able to Play Online Demo Online game
Content As to the reasons Play Gold Fish Local casino? Ready to gamble Wonderful Aquarium for real? Quantity of casinos Harbors Overflowing with Excitement Searched