14557 அஞர்: சேரன் கவிதைகள்.

சேரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (சென்னை 600077: மணி ஓப்செட்). (14), 15-87 பக்கம், விலை: ரூபா 390., இந்திய ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-88631-04-4. அஞரின் வழியே சேரன் கோடிக்கணக்கான தமிழர்களின் வாதையைப் பதிவு செய்திருக்கிறார். லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் வாதைகளை, கோபங்களை, ஆற்றாமைகளை, நினைவுகளைக் கவிதைமொழியாக்கினால் அதுதான் “அஞர்”. 1980-களில் எழுதத் தொடங்கிய சேரனின் பத்தாவது கவிதைத் தொகுப்பு இது. போரின் துயரை முன்வைத்து வாழ்வின் மீதான வேட்கையை அதிகரிக்கச் செய்கின்றன இக்கவிதைகள். நீர், கவிஞனை நினைவு கொள்வது எப்படி?, ஆற்றில் நடந்தமை, பறவை, உயிர், அந்திரேசுவும் ஏர்வினும், அம்மாவின் நிழல்கள், நினைவிலி, கவிஞன் இருந்த அறை, வீடு, மாயப் பிசாசு, அது தான், மிதக்கும் வெளி, எந்த இடத்திலிருந்து வந்திருக்கின்றோம், முடிவு, நிழல் முகம், ரோஹிங்யாவுக்கும் எமக்கும், அந்த இடம் எனக்குத் தெரியும், படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், விரல், சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ் விசுவாசியின் ஆனந்தக் கண்ணீர், காவல் முகாம், சுந்தரி, நிலம், நிலாவணனுக்கு, பெயர், கவிஞர்கள், தோழர் நிக்கொலாய் புக்காரினுக்கு, பிரியாவிடை, தாத்தாவின் கஞ்சாச் செடி, தாலாட்டு, பொதி, சசிக்கு, உப்புமுத்தம், எஞ்சி இருக்கும் சொற்கள், பொன்மீன், ஐயோ, அளற்ற தனித் தீவில் அழியாத காலடியும் எழுதாத கவிதையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், நல்லூர், அஞ்சலி, புதைகுழி, நிலை, அறம் பாடியது, கவி, எனக்கானது, இசை, உதிரா இலை, தேற்றம், அஞ்சனிக்கு, எல்லோனுக்கு என ஈழப் போர் இழப்புகளின் சாட்சியமாய் உலகின்முன் வைக்கப்பட்டிருக்கும் அஞர் கவிதைகள் தனித்துவமானவை. ஆனந்தவிகடன் இதழின் “நம்பிக்கை விருதுகள்” எனப்படும் 2019ஆம்ஆண்டுக்கான சிறந்த கவிதைத் தொகுப்புக்கான விருதைப் பெற்றது.

ஏனைய பதிவுகள்

12494 – மகுடம்: 85ஆவது ஆண்டு சிறப்பு மலர் 1923-2008.

மா.பாலசிங்கம் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி தேசிய பாடசாலை, 1வது பதிப்பு, 2008. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், இல.43, திருஞானசம்பந்தர் வீதி). xxvi, (6), 144 பக்கம்,

14961 வடிவேல் ஐயா நினைவு மலர்: 05.12.2004.

மலர்க் குழு. திருக்கோணமலை: மலர் வெளியீட்டுக் குழு, பாக்கியபதி, 15, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம், 28B புதிய சோனகத் தெரு). 107 பக்கம், தகடுகள்,

14900 இணுவில் பெரிய சந்நியாசியாரின் வாழ்வும் வளமும்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் மூ.சிவலிங்கம், இணுவில், 1வது பதிப்பு, ஆடி 2018. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.

12186 – ஹரிஹர சுதன் தெய்வீகப் பாமாலை.

ஸ்ரீ ஐயப்பன் புனித யாத்திரைக் குழுவினர். கொழும்பு 6: மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானம், 17A, மயூரா பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, மார்கழி 2001. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ,

14880 வாழகம், பொருளாதாரம், சமூகம்.

சீ. டரில் போட் (ஆங்கில மூலம்). கொழும்பு 3: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், “சிறிமதி பாயா”, 58, சேர் ஏர்னெஸ்ட் த சில்வா வீதி, 1வது பதிப்பு, 1967. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).