சம்பூர் வதனரூபன். சென்னை 600024: வடலி வெளியீடு, F-1, ஸ்ரீவாரி பிளாட்ஸ், 8A, அழகிரி நகர் 4வது குறுக்குத் தெரு, லட்சுமிபுரம், வடபழனி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 96 பக்கம், விலை: இந்திய ரூபா 70.00, அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-0-9919 755-0-1. பிரிவினைவாதத்தை ஒழித்தல், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், நக்சல்பாரிகளை நசுக்குதல், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல் என்ற நூற்றுக்கணக்கான அழகான பெயர்களைச் சூடிய போர்கள் உலகம் முழுவதும் மக்களை வேரோடும் வேரடி மண்ணோடும் அவர்களது வாழ்விடங்களிலிருந்து பிய்த்தெறிந்துவிட்டு வளம் மிக்க அம்மக்களது நிலத்தை இலாப வேட்டைக்கும் பேராசைக்கும் தாரைவார்க்கின்ற கதைகள் சமகாலத்தின் அன்றாடச் செய்திகள். இன்றைய உலக ஒழுங்கின் மாபெரும் சதுரங்கப்பலகையில் எவரெவரதோ ஆட்டங்களுக்காக எதற்கு வெட்டப்படுகிறோம் என்றே தெரியாமல் வெட்டப்பட்டு வீழும் மதிப்பற்ற வெறும் காய்களான மக்களது உள்ளத்தினை சம்பூர் வதனரூபனின் இக்கவிதைகள் சிறிதளவிலேனும் பதிவு செய்ய முயன்றிருக்கின்றன. இலங்கையின் அண்மைக்கால அரசியல் நடப்புக்கள் பற்றியும் இலங்கையின் தேசிய இன முரண்பாடு பற்றியும் போர் பற்றியும் ஓரளவுக்கேனும் அறிந்து வைத்திருக்கும் வாசகர்களுக்கு, சம்பூர் வதனரூபனின் இக் கவிதைத் தொகுப்பிலுள்ள கவிதைகள் சொல்லவரும் பொருளையும் தொற்ற நினைக்கும் உணர்வினையும் புரிந்துகொள்வதிற் சிரமங்கள் அதிகம் இராது. இங்கே தொகுக்கப்பட்டிருக்கும் வதனரூபனின் கவிதைகள் பெரும்பாலும் 2005-2006 இற்குப் பின்னான சம்பூரினதும் மூதூர் கிழக்கினதும் அரசியல் நிலவரத்தின் உறுத்தலாலும் உந்துதலாலும் உருவானவை. வெறும் வாய்ச்சவடால் தமிழ்த்தேசிய அரசியலின் பொய்முகத்தையும் மிகுந்த கோபத்தோடு விமர்சிக்கும் கவிதைகள் பல இத்தொகுப்பினுள் அடங்குகின்றன.
Sweet Bonanza from the Pragmatic Gamble Sweet Bonanza Slots Video game
Posts Star trek slot for real money – Paytable Greatest TrueLab Games Slots King of your Pyramid: Super Bucks Gather An universe of Fresh fruit