கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital 14, அத்தபத்து டெரஸ்). viii, 64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5222-00-1. இந்நூலில் காரைக் கவிஞரின் அம்மா எனும் ஆசியாவின் அதிசயம், வனப்புவக்கும் வன்னி, விபச்சாரிகள், அந்திப் பொழுது, நீத்தாய், அம்மம்மா, மகனுக்கு ஓர் மடல், வன்னி விவசாயி, ஆசைப்பத்து, அப்பா, ஏன்தான் பிறந்தேன், கடவுளுக்கு ஒரு கடிதம், கடைசி மிச்சம், கணபதிக்கு குடமுழுக்கு, பாரதியெனும் பாட்டாளிப் புலவன், காதலித்துப் பார், காவியகால வாழ்வு, ஊழ்வினை, கொஸ்லாந்தைக் கொடுமை, தண்ணீரில் தமிழகம், தமிழே நீயே ஐம்பூதம், தேயிலை நிலத்துத் தேவதை, கோச்சி ஏறிய கொச்சியும் கொப்புவும், வீதியே உனக்கு வீடானதோ? ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. சமகால சமூக நிகழ்வுகளுக்கு இக்கவிதைகளில் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. காரைக்கவி கந்தையா பத்மநாதன் அவர்களின் மற்றுமொரு கவிதைத் தொகுதி. நூலாசிரியர் பல்துறை ஆளுமையுடையவராகத் தன்னை இனம்காட்டிக்கொண்டவர்.