துவாரகன் (இயற்பெயர்: சு.குணேஸ்வரன்). யாழ்ப்பாணம்: புத்தகக் கூடம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, பங்குனி 2016. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xvi, 83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×13 சமீ., ISBN: 978-955-51949-4-5. துவாரகனின் கவிதை மொழி மிக எளிமையானது, சிக்கலில்லாதது. கடந்துபோன காலத்தின் காயப்பட்ட மனிதர்களின் பாடுகளைச் சொல்வது. இன்றைய காலத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடிகளையும் அதிகாரத்தின் கோர முகங்களையும், மனிதர்களின் போலித் தனங்களையும், மனித மனங்களின் அலைக்கழிப்புகளையும் வெளிப்படுத்துவன. சுப்பிரமணியம் குணேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் தொண்டைமானாறு கெருடாவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு என்பவற்றில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகிறார். இவரது முதலாவது கவிதைத் தொகுதி “மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள்” (2008) வடக்கு மாகாணத்தின் சிறந்த நூலுக்கான விருதினையும், யாழ் இலக்கிய வட்டத்தின் கவிஞர் ஐயாத்துரை நினைவு விருதினையும் அவ்வாண்டு பெற்றுக்கொண்டது.