14563 அம்மை: கவிதைகள்.

பா.அகிலன். யாழ்ப்பாணம்: பேறு வெளியீடு, 71/2, கச்சேரிநல்லூர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). (4), 86 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-53902-3-1. “காணாமற் போனாள்”, “மழை” ஆகிய இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டிருக்கும் இந்நூலிற்கு “காணாமற் போனாள்” என்ற முதலாவது பகுப்பிலுள்ள “அம்மை” என்ற ஒரு கவிதையின் தலைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. முழுத்தொகுப்புக்குமான பொருத்தமான தலைப்பாக இது அமைகின்றது. கடந்த காலத்தின் யுத்தத்தின் அவலங்களை அகிலன் காண்கிற குறியீட்டுச் சொல்லாகவும் “அம்மை” அமைகின்றது. நாற்பத்திரண்டு கவிதைகளைக்கொண்ட “அம்மை” இருபத்தொன்பது கவிதைகளைக் கொண்ட “காணாமற் போனாள்” என்றாகவும், மீதி பதின்மூன்று கவிதைகள் “மழை” என்றாகவும் இடம்பெற்றுள்ளன. தன்னுடையதும், பிறருடையதுமான போர்க்கால அனுபவங்களிலிருந்து சுழித்தெழுந்த இத் தொகுப்பின் பெரும்பாலான கவிதைகளின் ஊற்று, மன உடல்ரீதியாக அடைந்த அவலங்களினதும் வடுக்களினதும் மையத்திலிருந்தே பீரிட்டெழுகிறது. கைகால்கள் போன்ற பொறிகள் மட்டுமில்லை, புலன்களும்கூட இழக்கப்பட்டன. மிகக்கொடூரமான மனித அவலம் சம்பவித்தது. ஆனால் அந்த அவல உணர்வுகள் மீளுதல் சாத்தியமற்ற நிர்கதியின் இருளாய் உறைவடைந்து மேலும் பகுக்கக்கூடிய திண்மமாய் “அம்மை” கவிதைகளில் மாற்றம் பெறுகின்றன. கீதா சுகுமாரனின் “உளப்பாடும் திருப்பாடும் யுத்தம், அகம், வெளி” இந்நூலின் அறிமுகக் கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.

ஏனைய பதிவுகள்

Free Harbors On line Vegas Casino games

Content Bikini beach hd $5 deposit: Boring however, Fun DoubleDown Gambling establishment No deposit 100 percent free Chip Extra Gamble Your preferred Megabucks Vegas Ports