தென்பொலிகை குமாரதீபன். வல்வெட்டித்துறை: ஆதிரை வெளியீட்டகம், வீரபத்திரர் கோவிலடி, பொலிகண்டி, வல்வெட்டித்துறை, 1வது பதிப்பு, மே 2016. (தொண்டைமானாறு: உயிர்மெய் பதிப்பகம், பிரதான வீதி). xxiv, 70 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-43251-0-4. தென்பொலிகை குமாரதீபனின் இருபது வருட காலக் கவிதைப் படைப்புகளை உள்ளடக்கிய முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும். இதில் இவரது பல்கலைக்கழகக் கால கவிதைகள் உள்ளிட்ட 36 தேர்ந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இருப்பின் மௌனம், தாலாட்டு, வாழ்க்கைப் பயணம், மை வாழ்க்கை, நமதுகள், அறுவடைக் காலத்து மழை, நரகம், ஆக்கவிழி, தூக்கு, இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, நாகரிகம், அதிசயம், நாளை, சூனியப் பறவை, மிருகம் அல்ல, மிருகம் எதற்கு, வித்தியாசமானவர்கள், வாழ்த்து, எல்லை, விழி, இருப்பு, விமர்சனம், எச்சரிக்கை, அருவம், முரண், சுதந்திர மனிதன், புரட்சி, நிலமசை விம்பம், இரசம் தீர் கண்ணாடிகள், முரண்நகை, வேட்டை, சாவீடு, நம்பிக்கை, சுயம், ஏலம், இடம் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.