நெல்லை லதாங்கி (இயற்பெயர் திருமதி ஆனந்தராணி நாகேந்திரன்). கரவெட்டி: ஆனந்தா நாடக மன்றம், மகாத்மா வீதி, நெல்லியடி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (பருத்தித்துறை: வெற்றிவிநாயகர் ஓப்செட் பிரிண்டர்ஸ், செட்டித் தெரு). xiii, 75 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ. 15.10.2012 அன்று நெல்லை லதாங்கியின் ஐம்பதாவது அகவை நிறைவையொட்டி வெளியிடப்பட்ட சிறப்பு மலர். இது பாடல், கவிதை, நாட்டிய நாடகம் (காரைக்கால் அம்மையார்), வில்லுப்பாட்டு (ஸ்ரீ இராமகிருஷ்ணர், புரந்தரதாசர், முத்துத் தாண்டவர்), தாளலயம் (பட்டால்தான் புத்தி வரும்) என ஐந்து பிரிவுகளின் கீழ் படைப்பாக்கங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார். பாடல், கவிதை, ஆகிய பிரிவுகளில் பாராமுகம் ஏனையா பராபரனே, புதியதோர் உலகம் செய்வோம், அன்பும் அறனும் வேண்டுமப்பா, சுகம் காண வாருங்களேன், சிதைந்து போனதடா, சந்நிதிக் கந்தனே, இசை எனும் கோவிலிலே (பிரதேச மட்டத்தில் மூன்றாமிடத்தையும், மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தையும் பெற்ற பாடல்), அம்மன் துதி, முருகன் துதி, சக்திப் பாமாலை, மரங்களின் பயன்பாடு பற்றிய பாடல், அன்புத் தெய்வம் அன்னைக்கு, தாயே நீ எந்தன், ஆசான் புகழ்மாலை, கப்பற் பாடல், கண்ணன் துதி, ஆசான் தினப்பாடல், கால்கோள்விழாப் பாடல், சுனாமி, வடக்கின் வசந்தம், பிரிவுபசாரப் பாடல், வாழ்த்துப் பாடல், எல்லோரும் இன்புற்றிருக்க (பிரதேச மட்டத்தில் 2012இல் முதலாமிடம் பெற்ற கவிதை), நாம் சிறுவர், மனித மனங்கள், யாரென்று புரிகிறதா?, உலகை மலர்விக்கும் காலைப் பொழுது, எல்லாம் அறிந்திருந்தும், அறிவின் விளைநிலம் கல்விச் சாலைகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.