வெற்றிச்செல்வி. (இயற்பெயர்: வேலு சந்திரகலா). கிளிநொச்சி: தவமணி வெளியீட்டகம், 2வது பதிப்பு, ஏப்ரல் 2017, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2007. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், முத்திரைச் சந்தியடி, நல்லூர்). (10), 41 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-41027-6-7. பேரினவாத அரசின் அடக்குமுறை வடிவங்களின் சிறைப்படுத்தலிற்கு இலக்கான பெருமளவிலான தமிழ்க் குடும்பங்கள் படுகின்ற அவஸ்தைகளை, அவர்கள் பகிர்ந்து கொள்கின்ற சுகதுக்கங்களை, அவற்றினால் துவண்டுவிடாது எதிர்மறையாக மேலிடும் வீரம் செறிந்த விடுதலை உணர்வினை பிரதிபலிக்கின்றன வெற்றிச் செல்வியின் கவிதைகள். இந்தக் கவிதைகளும் அனைவருக்குள்ளேயும் வீரத்தை ஊற்றும். கிளிநொச்சி கப்டன் வானதி வெளியீட்டகத்தினால் ஓகஸ்ட் 2007இல் முதற்பதிப்பாக வெளியிடப்பெற்ற இக்கவிதைத் தொகுதியின் இரண்டாவது பதிப்பு இதுவாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிப்படப் பிரிவின் போராளி ஈழமொழியின் புகைப்படங்கள் கவிதைகளுக்கு மெருகூட்டியுள்ளன.