14570 இப்படிக்கு தங்கை: புனர்வாழ்வு காலத்தின் உண்மைப் பதிவு-2010.

வெற்றிச்செல்வி (இயற்பெயர்: வேலு சந்திரகலா). மன்னார்: வேலு சந்திரகலா, 1வது பதிப்பு, மார்ச் 2017. (யாழ்ப்பாணம்: அன்றா பிறிண்டேர்ஸ், இல. 379, கஸ்தூரியார் வீதி). 32 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16×10.5 சமீ., ISBN: 978-955-41027-3-6. மன்னாரில் அடம்பன் கிராமத்தில் பிறந்த வெற்றிச்செல்வியின் இயற்பெயர் சந்திரகலா. இளமைக்கனவுகளை துறந்து ஈழக்கனவுடன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1991 இல் இணைந்துகொண்டவர். 1993 இல் தமது ஒரு கையையும் ஒரு கண்ணின் பார்வையையும் இழந்தவர். அத்துடன் அவர் ஓய்வுபெறவில்லை. வீட்டுக்குத்திரும்பவில்லை. 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இறுதிப்போர் வரையில் வெற்றியின் நம்பிக்கையோடும் ஓர்மத்துடனும் களத்தில் நின்றவர்.நடந்து முடிந்த யுத்தத்தின் இறுதித்தருணம்வரையில் களத்தில் நின்றவர்கள் பலராயிருந்தபோதிலும், அங்கே என்ன நடந்தது என்பதை எல்லோராலும் ஆவணப்படுத்த முடியாது. வெற்றிச்செல்வி, மக்களின் இழப்புகளையும் அவர்கள் தக்கவைத்திருக்கும் வலிகளையும் அவர்களின் எதிர்காலம் பற்றிய ஏக்கங்களையும் உணர்ச்சிபொங்க பதிவுசெய்துள்ளார். அதேசமயம் போர்வலயத்தில் சிக்குண்டிருந்த மக்களின் மனநிலையையும் அவர்கள் போராளிகளை எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள் என்பதையும் சித்திரிக்கின்றார். வெற்றிச்செல்வி ஓராண்டு காலம் பம்பைமடு புனர்வாழ்வு முகாமில் இருந்தபோது எழுதிய கவிதைகள் இவை. தடுப்ப முகாம்களில் வாழ்ந்தவர்களது சிரமங்கள் சொல்லில் அடங்காதவை. அவற்றில் சில பகுதிகளை, தவிப்புகளை ஒரு அண்ணனுக்கு எழுதும் தங்கையின் கடிதங்களாக இக் கவிதைகள் பதிவுசெய்கின்றன. புனர்வாழ்வு முகாம் வாழ்வின் நெருக்கடிகளுக்குள் எழுதப்பட்டவை இவை.

ஏனைய பதிவுகள்

14622 நா இடற வாய்தவறி.

காத்தான்குடி பாத்திமா (இயற்பெயர்: பாத்திமா முஹம்மட்). காத்தான்குடி: வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான பெண்கள் அமைப்பு, WEDF, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (மட்டக்களப்பு: எவகிறீன் அச்சகம், 185V, திருமலை வீதி). 50 பக்கம், விலை: ரூபா

12061 – விரத நியதிகள்.

பொன் தெய்வேந்திரன். இணுவில்: இணுவை சிவகாமி அருள்நெறி மன்றம், சிவகாமிபுரம், இணுவை கிழக்கு, 1வது பதிப்பு, நவம்பர் 1994. (யாழ்ப்பாணம்: அருண் அச்சகம்). (4), 54 பக்கம், விலை: ரூபா 45.00, அளவு: 21.5×15

14286 நாங்கள் யார்?

சிபில் வெத்தசிங்க. மொரட்டுவ: சிறுவர் உரிமைகள் கருத்திட்டம், சர்வோதய சட்டசேவை இயக்கம், தம்சக் மந்திர, 98, ராவத்தாவத்தை வீதி, 1வது பதிப்பு, 2001. (மொரட்டுவை: விஷ்வலேகா அச்சகம்). (12) பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14915 என் பெயர் விக்டோரியா: நதியைக் கடக்க முனைந்தவள்.

தொந்தா விக்டோரியா (ஸ்பானிய மூலம்), தேவா (தமிழாக்கம்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (சென்னை 600005: ஜோதி என்டர்பிரைசஸ்). 220

12690 – கர்நாடக சங்கீதம்.

தேசிய கல்வி நிறுவகம். மகரகம: நுண்கலைத் துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 13: யுனைட்டெட் மேர்ச்சன்ட்ஸ்லிமிட்டெட்). (8), 115 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x