தி.வினோதினி. மன்னார்: மன்னார் தமிழ்ச் சங்கம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). 105 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-43437-0-2. சர்மிலா திருநாவுக்கரசு என்ற இயற்பெயர் கொண்ட வினோதினி, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தில் உள்ள வேரவில்லை பிறப்பிடமாகக் கொண்டவர். மன்னாரை வசிப்பிடமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புப் பட்டதாரியாவார். சமூக உளவியலும் ஆற்றுப்படுத்தலும், ஊடகத் தொடர்பாடலும் அறிவிப்புத்துறை சார் நுட்பங்களும் ஆகிய துறைகளில் பட்டய நெறிகளையும் நிறைவு செய்துள்ளார். கவிதை, சிறுகதை, நாடகம், மேடைப்பேச்சு போன்ற துறைகளில் தேசிய ரீதியில் வெற்றிகளையும் ஈட்டியுள்ளார். இந்நூலில் வினோதினியின் எழுந்துவா, நகர(நரக) வாழ்க்கை, எனக்கும் முளைக்கும் சிறகுகள், பலிக்கடா, சூனியப் பெருவெளி, ருத்திர தாண்டவத்தில் சுற்றத்தைக் காத்தருளும், தமிழ் பேசு, அறிவியல் ஆரவாரம், மறக்கச் சொல்லித் தாருங்கள், புதிய பூமி, இரவுகளின் இராட்சசி, இன்றுவரை தேடுகின்றோம், பிறப்பிற்கு அர்த்தம் சொல்வோம், பிரித்தானியா, சுயம் உன் சுயம்பு, கடைசிக் காதலும் கரையும் நேரம், கோடியில் தேடி என்ன பலன்?, இயற்கை பேண், சந்தித்துக் கொள்வோம் வா, மௌன நடை, கூடாப்போதை கேடுகள் தருமே, ஏக்கம், உங்கள் வசைகள் அவள் காதுகளை எட்டப்போவதில்லை, கலாநிதி அப்துல் கலாம், தென்றலின் தவம், காலத்தின் பதில் என்ன, கோர்ப்பு, இரவுகளின் குழந்தைகள், அகன்று போகிறேன் அதிகமாய் நேசித்ததால், வஞ்சகப் பேய்கள், சில உறவுகள், பருந்துகள் பிரசங்கம் செய்வதில்லை, அவளின் உலகில், குரோதம் மற, நம்பிக்கை நூல், தெளி, ஊமைக் கண்ணீர், என்ன வளம் என்ன வளம் இதுவல்லோ அலுவலகம், பேய்களின் தாண்டவம், காதல் முத்தம் தரவே வா, ஏதேனும் ஒரு புள்ளியில் நானும் நீங்களும் சந்திக்கக்கூடும், விழித்துக்கொள் வாலிபமே, பிசாசுகளின் கலகம், வேறென்ன வேண்டும் எனக்கு, புதைந்த விதை மடிவதில்லை ஆகிய 45 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.