நீ.பி.அருளானந்தம். நாவலப்பிட்டி: திருமகள் பதிப்பகம், இல. 10, பெனடிக்ட் அவென்யூ, பவகம, 1வது பதிப்பு, மார்கழி 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). vi, 77 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955- 1055-17-2. நீ.பி.அருளானந்தம் அவர்களின் கவிதைகள் வாயிலாகத் தமக்கு அவ்வப்போது தோன்றும் எண்ணங்களையும் உணர்ச்சி நிலைகளையும் பூடகமின்றி வெளிப் படையாக பதிவுசெய்கிறார். பெரும்பாலானவை அவரது பிரத்தியேக உலகில் காணும் இயற்கையாகவும், தனிப்பட்ட பார்வையில் பிறர் பற்றிய அவதானிப்பு களாகவும், தன் பாரம்பரிய முதுசொத்துக்கள் அழியும்போது வெளிப்படுத்தப்படும் வேதனையாகவும், இன்னும் பலவாகவும் காணப்படுகின்றன. அடுத்த நிலை, இந்த இருப்பு, கபளீகரம், அலைச்சல் விடாய், ஏன் இந்தச் சிரிப்பு, சுகத்தின் நிலைப்பு, அங்கேயே மனம், ஆகாய வீதியில், உறவுகள் இப்படித்தான், பாதுகாப்பு, முதிர்நிலை, மனம் மாறும், மரம் விளக்கிடும் அவஸ்தை, சிரி-சிரி-சிரி-சிரிப்பு, மனதுக்குள் பழைய கதை, அறைந்து சொல்லிடுமே, சீரழிந்திருக்கிறது, உரு மாறி, நூல் அகம், சுகம் இங்கே ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 64540).