14575 இவள் கிறுக்கி.

கிறுக்கி ஆதிரா (இயற்பெயர்: செல்வி. நிரோஜினி பரமேஸ்வரன்). யாழ்ப்பாணம்: செல்வி. நிரோஜினி பரமேஸ்வரன், அரியாலை, 1வது பதிப்பு, 2019. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 672 B, காங்கேசன்துறை வீதி). x, 48 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-624-95678-0-1. அரியாலையைச் சேர்ந்த செல்வி. நிரோஜினி பரமேஸ்வரன், யாழ்/ கனகரத்தினம் மகா வித்தியாலயத்தின் உயர்தர வகுப்பு மாணவியாவார். 2019இல் தனது க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோன்றியுள்ள இவரது கன்னிப் படைப்பு இக் கவிதைத் தொகுப்பாகும். தன் உள்ளத்தில் துளிர்விட்ட உணர்வுகளை, வலிகளை, சுமைகளை, தான் கண்ட காட்சிகளை இங்கே வரி வடிவில் கவிதைகளாக்கிப் பதிவுசெய்துள்ளார். முதுமை, காதல், குடும்பம் என இவரது கவிதைகளின் கருக்கள் பெரும்பாலும் தன்னைச் சுற்றியுள்ள சமூகம் சார்ந்தவையாக உள்ளன.

ஏனைய பதிவுகள்