14581 எதனை வேண்டுவோம்: கவிதைத் தொகுதி.

சுமதி குகதாசன். கொழும்பு 6: ஆர். ஜனாதன், 28, 4/2, பசல்ஸ் லேன், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2013. (கொழும்பு 6: ஆர்.எஸ்.டி. என்டர்பிரைசஸ், 114, W.A.சில்வா மாவத்தை). (18), 19-77 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-44029- 1-1. தமது சுயநல அரசியல் இலாபங்களுக்காக இன அடக்குமுறை என்ற பிரச்சினையைத் தூக்கிப்பிடிக்கும் அரசியல்வாதிகளும், அவர்களின் தாளத்திற்கேற்ப அறிந்தோ அறியாமலோ ஆடிக்கிடக்கும் பிரகிருதிகளும் தன் மனதில் அவ்வப்போது ஏற்படுத்திய சலனங்களே இதிலுள்ள பெரும்பாலான கவிதைகள் என்றுரைக்கும் இக்கவிஞர், இத் தொகுப்பில் தன் படைப்பாக்கங்களில் தேர்ந்தெடுத்த தாய், பெருங்கவிஞன், கவிதை, படைப்பு, விநோதம் பார், கொடுமையிது தானோ, சாயங்கள், நிஜமெது, முடக்கம், எளிமையின் செழுமை, வறுமை, தலைமைக் குரல், தேர்தல், சுட்டது, உணர்த்துவதாய் உரைப்பீரோ, எதனை வேண்டுவோம், புரிதல், கல்வி, விழிப்பு, மானம், புதினமே புதினமாகி, பகிர்தலின் பாரங்கள், உணர்வு, தருணங்கள், பட்டதும் பெற்றதும், தீர்க்கதரிசனம், திருமணத் திருவிழா, ஏற்றம் காண், உறுதியாய் உரைத்திடுங்கள், சிதறுது நெஞ்சம், மனக்கோலம், உள்ளமதே புதையலதாய், மனத்தீரமே தீர்வாக ஆகிய 33 கவிதைகளை இணைத்துள்ளார்.

ஏனைய பதிவுகள்