14583 எல்லையற்ற வான்வெளியில்.

அனுராதா. கொழும்பு 6: ஸ்ரீநிதி பதிப்பகம், 42/11, முதல் தளம், சுவி சுத்தர்ராம வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (சென்னை 14: சீனிவாசா ஆப்செட்). 112 பக்கம், விலை: ரூபா 250., இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ. ஈழத்தின் தமிழ் இலக்கிய ஆர்வலரான வீ.அனுராதா, சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்-இராஜேஸ்வரி தம்பதிகளின் இரண்டாவது புதல்வியாவார். அனுராதாவின் முகநூல் பக்கத்தில் வெளிவந்து பாராட்டுப்பெற்றவற்றுள் தேர்ந்தெடுக்கப்பட்ட 90 புதுக் கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவரது முதலாவது நூல் வெளியீடு இது. இவரது கவிதைகளின் பாடுபொருளாக பாடசாலைப் பருவம், இளமைக் குமுறல், நண்பர்கள், குடும்பச் சூழல், மானுட மேம்பாடு என்பனவே பெரும்பாலும் காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்