14585 எறிகணைத் தாலாட்டு.

சாத்தானின் சகோதரன் (இயற்பெயர்: ஆ.கண்ணப்பன்). மருதமுனை: ஹிஸ் ஸபாப் கம்பியூட்டர் சேர்விஸஸ், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கல்முனை: க்ரேட் ட்ரஸ்ட் அச்சகம், மட்டு வீதி). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ. பட்டிருப்புத் தொகுதியின் பழம்பெரும் கிராமமான களுதாவளையில் பிறந்தவர் கண்ணப்பன். இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் இவரது ஆக்கங்கள் களம் கண்டன. இத்தொகுதியில் இவரது 36 கவிதைகள் இடம்பெறுகின்றன. முடிவுகளின் தொடக்கத்தில், கணனி எதிர்வுகள், காற்றலை நியாயங்கள், ஈ மெயில் சங்கதி, மூளைச் சலவைகள், வெள்ளைப் பிரம்பு, தொலைபன்னி உபதேசம், முதல் மூச்சு, மின்சார ஜோசியம், கணிப்பொறி ஞானம், கறுப்பு நிலா, மனிதம் வாழ, செய்மதிச் செய்திகள், பிணங்களும் சவங்களும், தேவையும் நிவாரணமும், முடிவை எடு, எறிகணைத் தாலாட்டு, சமாதிகளின் சமாதானம், மின்வெட்டு வாசகங்கள், பற்றிக்கொள், அந்தரங்கச் சமாச்சாரம், செவிகளைத் தாருங்கள், உன்னிலே நான், நிதர்சன நிகழ்வுகள், கவிதையிலே மட்டும், படலைக் கிரகணர்கள், உண்மையின் உண்மைகள், சத்தமில்லாச் சம்மதக் கதவாலே, புளுதிப் பூக்கள், நான், மூன்றாம் பிறை முன்மொழிவு, வழக்கம் போல, எழுந்து நடக்கும் எலும்புக் கூடுகள், பெயர்வுகளின் பெயர்ப்புகளில், உதிரும் நட்சத்திரம், களஞ்சியத்திலிருந்து ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் வெளிவந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

14329 இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றம்: அரசியலமைப்புக்கான பதினேழாவது திருத்தம்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: பாராளுமன்ற செயலகம், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2001. (கொழும்பு: அரசாங்க அச்சுத் திணைக்களம்). 59 பக்கம், விலை: 49.25, அளவு 21×15 சமீ. இவ்வரசியலமைப்புச்

14311 சந்தைப் பொருளாதாரம் என்றால் என்ன?

மைக்கல் வாட்ஸ், எஸ்ரா சொலமன் (ஆங்கில மூலம்), டி.தனராஜ், எஸ்.அன்ரனி நோபேட் (தமிழாக்கம்), எஸ். அன்ரனி நோபேட் (பதிப்பாசிரியர்). கொழும்பு 5: பொதுசன கல்வி நிகழ்ச்சித் திட்டம், மார்கா நிறுவகம், 61, இசிப்பத்தன மாவத்தை,

14158 பருத்தித்துறை கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சித்திரத்தேர் வெள்ளோட்ட சிறப்புமலர் 23.2.2017.

இ.திருமாறக் குருக்கள் (தொகுப்பாசிரியர்). பருத்தித்துறை: தேர்த் திருப்பணிச் சபை, கொட்டடி ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பருத்தித்துறை: சிவா ஓப்செட் பிரின்டர்ஸ், வியாபாரிமூலை). xvviiiஇ 33 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12327 – பயிற்று மொழியாக மீண்டும் ஆங்கிலம்: ஒரு விளக்கநிலை நோக்கு.

சோ.சந்திரசேகரம், மா.கருணாநிதி. கொழும்பு 7: அகவிழி வெளியீடு, 3, டொறிங்டன் அவெனியூ, 1வது பதிப்பு, டிசம்பர் 2006. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55, ஈ.ஏ.குரெ மாவத்தை). 96 பக்கம், விலை: ரூபா 125.00,

12557 – தமிழ் ஆண்டு 11.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 1வது பதிப்பு, 1987. (கொழும்பு: திசர அச்சகம், 135, துட்டுகமுனு வீதி, தெகிவளை). viii, 276 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14789 புள்ளிகள் கரைந்த பொழுது (நாவல்).

ஆதிலட்சுமி சிவகுமார். சென்னை 600078: கலைமாறன் வெளியீட்டகம், தோழமை பதிப்பகம், எண் 10, 6ஆவது தெரு, முதல் பிரிவு, கே.கே.நகர், 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 272 பக்கம், விலை: