சாத்தானின் சகோதரன் (இயற்பெயர்: ஆ.கண்ணப்பன்). மருதமுனை: ஹிஸ் ஸபாப் கம்பியூட்டர் சேர்விஸஸ், 1வது பதிப்பு, ஜுலை 2002. (கல்முனை: க்ரேட் ட்ரஸ்ட் அச்சகம், மட்டு வீதி). 60 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×15 சமீ. பட்டிருப்புத் தொகுதியின் பழம்பெரும் கிராமமான களுதாவளையில் பிறந்தவர் கண்ணப்பன். இலங்கை வானொலியின் தமிழ்ச்சேவையில் இவரது ஆக்கங்கள் களம் கண்டன. இத்தொகுதியில் இவரது 36 கவிதைகள் இடம்பெறுகின்றன. முடிவுகளின் தொடக்கத்தில், கணனி எதிர்வுகள், காற்றலை நியாயங்கள், ஈ மெயில் சங்கதி, மூளைச் சலவைகள், வெள்ளைப் பிரம்பு, தொலைபன்னி உபதேசம், முதல் மூச்சு, மின்சார ஜோசியம், கணிப்பொறி ஞானம், கறுப்பு நிலா, மனிதம் வாழ, செய்மதிச் செய்திகள், பிணங்களும் சவங்களும், தேவையும் நிவாரணமும், முடிவை எடு, எறிகணைத் தாலாட்டு, சமாதிகளின் சமாதானம், மின்வெட்டு வாசகங்கள், பற்றிக்கொள், அந்தரங்கச் சமாச்சாரம், செவிகளைத் தாருங்கள், உன்னிலே நான், நிதர்சன நிகழ்வுகள், கவிதையிலே மட்டும், படலைக் கிரகணர்கள், உண்மையின் உண்மைகள், சத்தமில்லாச் சம்மதக் கதவாலே, புளுதிப் பூக்கள், நான், மூன்றாம் பிறை முன்மொழிவு, வழக்கம் போல, எழுந்து நடக்கும் எலும்புக் கூடுகள், பெயர்வுகளின் பெயர்ப்புகளில், உதிரும் நட்சத்திரம், களஞ்சியத்திலிருந்து ஆகிய தலைப்புகளில் இக்கவிதைகள் வெளிவந்துள்ளன.