கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). vi, 70 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-624-5222-03-2. காரைக்கவி கந்தையா பத்மானந்தன் காரைநகர் மண்ணின் கல்வித்துறை ஆளுமைகளில் ஒருவர். அவர் எழுதிய புதுக் கவிதைகளின் தொகுப்பு இது. மாதிரிக்கு ஒன்று: வேலியை விட்டு நட்டஃ கதியால் கொஞ்சம் விலகியதால் பக்கத்துஃ வீட்டுக்காரனுடன் வந்தஃ வேலிச் சண்டை வில்லங்கத்தைஃ முறையிடக் கோவிலுக்குப் போனால்ஃ அம்மன் வழக்கு விசாரணைக்காக/ கோட்சுக்குப் போய்விட்டதாக/ ஐயர் குறைபட்டுக் கொண்டார். விஞ்ஞானப் பட்டதாரியான கந்தையா பத்மானந்தன், முதுநிலைக் கற்கையினையும், தொழில்வாண்மைக் கல்வியினையும் பல்வேறு நாடுகளிலும் பெற்றிருந்தவர். இலக்கியத்துறையில் கவிதை, கட்டுரை என ஈடுபாட்டுடன் எழுதி வருபவர்.