கற்பகம் யசோதர (இயற்பெயர்: பிரதீபா கனகாதில்லைநாதன்). சென்னை 600005: வடலி வெளியீடு, பி-55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). 102 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-7752392- 8-4. (நூலின் உட்புறத்தில் ISBN: 978-1-7752392-7-7 என்று பதிவாகியுள்ளது). அரசாங்கங்கள் தமது ஒற்றைத் தன்மையுடைய வழிமுறைகளை தமக்கான அதிகாரங்களை தக்கமைத்த நாட்டில், தான் வாழ்ந்த-எதிர்கொள்கின்ற பல்வேறு அரசியல் சிக்கல்களையும், அதிகார சமமின்மைகளையும், வன்முறைகளையும், சனநாயக மீறல்களையும், அதிகாரத்திற்கு எதிராக நின்று பேசுகின்ற கவிதைகள் கற்பகம் யசோதரவினுடையவை. ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் அரசியலைஅவர்கள் எதிர்கொண்ட கீழைத்தேய வன்முறைகளை மேலைத்தேய அரசின் வன்முறையுடன் ஒப்பிடுவதினூடாக-சிறுபான்மையினராய் எங்கும் இணைந்துவிடாத அசமத்துவத்தின் பயங்களையும் அதன் அரசியலையும் இவை பேசுகின்றன. “எனது மகள் கேள்வி கேட்பவள்” வளர்ந்து கட்டமைக்கப்பட்ட கருத்தியல்களுடன் முரண்படப் போகின்ற மகள்களை எதிர்வுகூறுவது. சமத்துவமற்ற இந்த வாழ்வில்- முரண், இயல்பு. ஆதலால் முரண்படவும் தங்கிப் போதலன்றி ஒப்புவித்தலன்றி அநீதிக்கெதிராய் கேள்வி கேட்கவும் ஒன்றிணையவும் வேண்டிநிற்கின்றன இக் கவிதைகள். வன்னிப் பிரதேசத்தின் மல்லாவியில் 1980களில் பிறந்தவர் பிரதீபா கனகா-தில்லைநாதன். இவரது தந்தையார் கே. தில்லைநாதன் ஒரு விடுதலைப் போராளியாவார். சில காலம் இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர். 1990இல் போராளிகளின் முடிவுக்கிணங்க பதவியைத் துறந்து வெளியேறியவர். கற்பகம் யசோதர தற்போது புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவருகிறார்.
Casumo Extra 20 100 percent free Spins No deposit Necessary
Posts Diamond Mine Deluxe slot machine | The device Gambling enterprise Totally free Revolves No deposit Necessary (No Betting Criteria), 30 100 percent free Revolves