14593 ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்: அனாதியன் கவிதைகள்.

மார்க் ஜனாத்தகன். லண்டன்: தொலைநோக்கி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvi, 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-42815-0-9. புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் இங்கிலாந்து தேசத்தில் வசிக்கும் ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியைச் சேர்ந்த அனாதியன் என்கின்ற மார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதைத் தொகுதி இது. முகநூலில் “அனாதியன் கவிதைக் களம்” எனும் கவிதைப் பக்கம் ஒன்றினையும் இவர் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வலிசுமந்த, கட்டிழந்த சமூகத்தின் உள்ளுடைப்புகளை இவரது தன்னுணர்வுக் கவிதைகளில் காணலாம். மிகையான வேகநடையில் ஆக்ரோஷ மாக அமைந்த சொற்கோவைகளினூடாக காலப்பாதையில் இவரது கவிதையூர்தி பயணிப்பதாகவும், வறண்டுபோயுள்ள பிரதேசக் கவிப்பாதைக்கு புத்துயிர் தருவதாக இத்தொகுப்பு அமைந்துள்ளதாகவும் நூலாசிரியர் அறிமுகத்தில் கவிஞர் வே.முல்லைத்தீபன் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

17400 ஈழம்: நம் மௌனம் தாய்பாலில் நஞ்சு.

த.செ.ஞானவேல். சென்னை 600 004: போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு, நல்லோர் பதிப்பகம், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (சென்னை 14: தேவன் அச்சகம், இராயப்பேட்டை). (102)

12290 – இலங்கையிற் கல்வி: கி.மு.ஆறாம் நூற்றாண்டு முதல் இற்றை வரை: நூற்றாண்டுவிழா மலர் (பகுதி 1).

நூற்றாண்டு விழா மலர்க் குழு. கொழும்பு: இலங்கை கல்வி கலாசார அலுவல்கள் அமைச்சு, 1வது பதிப்பு, 1969. (கொழும்பு: அரசாங்க அச்சகப் பகுதி). lxxxvi 405 பக்கம், வரைபடங்கள், விலை: ரூபா 525., அளவு: