14593 ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்: அனாதியன் கவிதைகள்.

மார்க் ஜனாத்தகன். லண்டன்: தொலைநோக்கி வெளியீடு, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvi, 129 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-42815-0-9. புலம்பெயர்ந்து பிரித்தானியாவில் இங்கிலாந்து தேசத்தில் வசிக்கும் ஈழத்தின் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியைச் சேர்ந்த அனாதியன் என்கின்ற மார்க் ஜனாத்தகன் எழுதிய கவிதைத் தொகுதி இது. முகநூலில் “அனாதியன் கவிதைக் களம்” எனும் கவிதைப் பக்கம் ஒன்றினையும் இவர் நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வலிசுமந்த, கட்டிழந்த சமூகத்தின் உள்ளுடைப்புகளை இவரது தன்னுணர்வுக் கவிதைகளில் காணலாம். மிகையான வேகநடையில் ஆக்ரோஷ மாக அமைந்த சொற்கோவைகளினூடாக காலப்பாதையில் இவரது கவிதையூர்தி பயணிப்பதாகவும், வறண்டுபோயுள்ள பிரதேசக் கவிப்பாதைக்கு புத்துயிர் தருவதாக இத்தொகுப்பு அமைந்துள்ளதாகவும் நூலாசிரியர் அறிமுகத்தில் கவிஞர் வே.முல்லைத்தீபன் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Finest Maestro Casinos 2024

Posts Greatest Alive Mobile Gambling enterprises Better The newest Cellular Casinos To possess Android os What’s the Most trusted Internet casino? Can also be Uk

14156 நாவலர் நூற்றாண்டு நினைவு விழாச் சிறப்பிதழ் 1979.

நா.சோமகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, இல. 4, ஹோர்ட்டனடெரஸ், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (148) பக்கம், புகைப்படங்கள்,