14595 கலாபம்(கவிதைத் தொகுப்பு).

ம.கலையரசி. ஹட்டன்: மகேந்திரன் கலையரசி, செனன், 1வது பதிப்பு, 2015. (ஹட்டன்: காயத்திரி அச்சகம்). 112 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ. ஹட்டன்-செனன் தமிழ் மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரம் வரை கற்றிருக்கும் இக்கவிஞர், தமிழிலே தன்னைச் செழுமைப்படுத்திக்கொண்டவர். இயல், இசை, நடனம் என இன்னோரன்ன துறைகளில் ஈடுபாடுகொண்ட இவரின் விருப்புக்குரிய தெரிவாக கவிதையும் அமைந்துவிட்டது. தன்மனக் கதவினைத் தட்டிநின்ற சமகால வடிவங்களை, வக்கிரங்களை, எழுச்சிகளை, வீழ்ச்சிகளை, மன உளைச்சல்களைத் தன் நூலிலே வெளிப்படுத்தியுள்ளார். இவரது கன்னி முயற்சியாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. அன்புத் தாயே, குழந்தையாகிறேன், மரணித்த மனிதம், கொழுந்துப் பெண், காதல் வழக்கு, உன் முகம் காண, மன்னிக்கலாமா?, அறிந்தவனானேன், இன்னுமொரு முறை, க(இ)ஷ்டம், கலையாத சோகம், சாத்தான், தனிமை, கள்ளி, கணவனின் கல்லறையில், மலடியின் தாலாட்டு, விதியின் சதியில், ஆட்டுக்காரி, சுரம் தந்த வரம், பெண்ணே, நீயெனக்கு, பூப்பூக்கும் ஓசை, மத்தாப்பூ? களவொழுக்கம், மாற்றம் தான், தொடரும் பயணம், இறந்துபோனவள், வெட்டிவைத்த புதைகுழி, ஆயாமரம், சிருஷ்டி, கலிக்காதல், மலை தே(ந)சம், நீ என் காதலியானால், எனக்கும் தருவீர்களா?, காதலித்துப் பார், கலாபம், ஒரு முறையாவது பாருங்களேன், அகதிகளானோம், போற்றிப் பாடடி கண்ணே, திறனற்றவன், அம்மாவின் கணவன் ஆகிய 41 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

12200 – யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக்கொள்ளல்: அதன் உருவாக்கம், இயல்பு, அசைவியக்கம் பற்றிய ஒரு பிராரம்ப உசாவல்.

கார்த்திகேசு சிவத்தம்பி. கொழும்பு 5: தர்சனா பிரசுரம், 81, ஹவ்லொக் வீதி, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 36 பக்கம், விலை: ரூபா 50., அளவு: