பாமதி மயூரநாதன். யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ. பல காலமாக இயல்பாகவே திருமதி பாமதி மயூரநாதனுக்கு அமைந்துவிட்ட சிந்தனைச் சிதறல்களை புதுக்கவிதை உருவில் எமக்கு வழங்கியிருக்கிறார். அவ்வப்போது மனதை வருடும் உணர்வுகள் புதுக்கவிதைகளாக இடைக்கிடையே ஆன்மீக அறநெறிக் கலவையுடன் உருவெடுத்துள்ளன.
9910 இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஈழத்துத் தமிழ்ப் புலவர் வரலாறு (இரண்டாம் பாகம்).
சி.அப்புத்துரை. இலங்கை: தெல்லிப்பழைக் கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்). 312 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 800., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-50192-8-6)