சப்னா செய்னுல் ஆப்தீன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,663,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 88 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22.5×14 சமீ., ISBN: 978-955-30-9624-1. தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் மூலம் 2018இல் “மாயாவின் பேனா” என்ற கவிதைத் தொகுப்பினை வழங்கிய இக்கவிஞரின் மற்றுமொரு கவிதை நூல் இது. இதில் கடலலை கூறும் கதை, நிலவும் அவளும், கற்பழிப்பு, பகல்கள், அதிர்ஷ்டம், அவள் இறந்துவிட்டாள், இதுதான் மழை, புரிதல், வித்தியாசமான உலகம், இரவு, கறுப்பி, கவிதையின் வடிவம், அது அமாவாசை, காதலெனும் நதியினிலே, ஊதா, வேர்விடும் கனவுகள், மழையின் ஈரம், அவன் இமைகளைப் பிடித்திருக்கிறது, முதற்படி, பூக்கள் பறிமுதல், அவள் ஒருத்தி, சுயநலக்காரி, என்னை ஏமாற்றி விட்டாய், எதிர்பார்ப்பு, அவர்கள் நல்லவர்கள், அது ஓர் அறிமுகம், புதிர்கள், ஒற்றை முத்தம், அர்ப்பணிப்பு, ஒரு கோப்பை தேநீர், பயணங்கள், தாய்மை, விதவை, பிச்சை, வண்ணங்கள், அழகு, கடிகாரம், குருடிக்குத் தெரிந்த நிறம், நட்சத்திர பூமி, மீன்கள், மன்னிப்பதென்பது அத்தனை இலகுவானதா, புதையல், அவள், காடு, அது ஓர் ரகசியம், உள்ளத்தின் தீ, கனவுகள் கரைகின்றன, நிழலொன்று நிஜமானது, வாழ்த்துக்கள், காகிதப் பூவாகிறேன் ஆகிய தலைப்புகளில் கவிதைகள் தேர்ந்து தரப்பட்டுள்ளன.