அன்புடீன் (இயற்பெயர்: பீ.எம். கலந்தர் லெவ்வை). அக்கரைப்பற்று: பாலம் கலை இலக்கிய பேரவை, ஏ.ஜே. கொம்ப்ளெக்ஸ், பிரதான பாதை, 1வது பதிப்பு, ஜனவரி, 2002. (அக்கரைப்பற்று-01: செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட் ). xvi, 116 பக்கம், விலை: ரூபா 120., அளவு: 21×15 சமீ. அம்பாறை மாவட்டம் பாலமுனை கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர் அன்புடீன். அட்டாளைச்சேனை பிரதேசத்தின் மூத்த கலை இலக்கியப் படைப் பாளிகளுள் ஒருவராகக் குறிக்கப்படுபவர். கலை, இலக்கியச் செயற்பாடுகளில் இவர் சுமார் 35 வருட காலமாக ஈடுபட்டு வருகின்றார். முகங்கள், சாமரையில் மொழிகலந்து போன்ற கவிதைத் தொகுதிகளும், நெருப்பு வாசல் எனும் சிறுகதை தொகுதியும் இவருடைய படைப்பு நூற்களாகும். தபால் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள அன்புடீன் – பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்து வருகின்றார். கவிதை, சிறுகதைகள், உருவக்கதைகள், வானொலி/மேடை நாடகங்கள் என இவர் பதித்த தடங்கள் பல. மக்கள் சுதந்திரம், மானுட மகிழ்ச்சி, மனித சமத்துவம் இவைகளை இலட்சியமாகக் கொண்ட இக்கவிஞரின் கவிதைகளிலும் இவற்றைக் காணமுடிகின்றது. “காற்றும் கவிஞனும்” என்ற கவிதையில் தொடங்கி “சூரியன் வரைக்கும் என் தொனி கேட்கும்” என்ற கவிதை ஈறாக 49 கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. “சாமரையில் மொழி கலந்து-சில அவதானக் குறிப்புகள்” என்ற தலைப்பில் குறிப்புரையும் இறுதியில் இடம்பெற்றுள்ளது. பாலம் கலை இலக்கிய பேரவையின் முதலாவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது.