14603 சிகண்டி: தன்னைக் கடந்தவள்.

கவிதா லட்சுமி. சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 214, புவனேஸ்வரி நகர் 3வது மெயின் ரோடு, வேளச்சேரி, 1வது பதிப்பு, ஜனவரி, 2020. (அச்சக விபரம் தரப்படவில்லை). (8), 9-114 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93- 88133-63-0. புலம் பெயர்ந்த ஈழத்தவரின் இரண்டாவது பரம்பரையின் அசுரவளர்ச்சிக்கு ஓர் சிறந்த உரைகல்லாக விளங்குபவர் கவிதா லட்சுமி. ஈழத்தின் வடபுலத்தில் குரும்பசிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட கவிதா லட்சுமி மிகச்சிறிய வயதில் புலப்பெயர்வுக்கு ஆளாக்கப்பட்டவர். முதலில் தமிழகத்திலும், பின்னர் தற்பொழுது நோர்வே நாட்டிலும் வசித்துவரும் கவிதா, கவிதை, இலக்கியம், நடனம் என்று 340 நூல் தேட்டம் – தொகுதி 15 894.8(1) தமிழ்க் கவிதைகள் பன்முக ஆற்றல்களை தன்னகத்தே கொண்டவர். ஈழத்தின் இரண்டாம் புலம்பெயர் தலைமுறையில் தனக்கென்று தனிமுத்திரை பதித்த கவிதா பெண்ணிய, சமூக சிந்தனைகளை உடையவராகவும் எம்மிடையே அடையாளப் படுத்தப்பட்டுள்ளார். இவரது கவிதைகள் பெண், சமூகம் போர், வாழ்தல், காதல், மொழியாக்க கவிதைகள் என்று பல்வேறுபட்ட தளங்களில் பாடுபொருள்களைக் கொண்டவை. இவரது கவிதைகளிலே இலகு சொல்லாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தொகுதியில் இவரது படைப்புக்களான கிறுக்கல்கள், தன்னைக் கடந்து, என்னை வரையும் நான், நான் பெண்மையின் உச்சமாகிறேன், பேரழகு, மகனுக்கு, ஊஞ்சல், ஒரு பறவையைக் கொல்வது எப்படி?, கவிதை, கனவு விரிப்பு, சூர்ப்பனகை, அப்பம்மாவின் வீடு, தற்கொலை செய்தவனின் நாட்குறிப்பு, முத்தங்கள், மழைப்பெண், அப்படியே விடு, ஞானம் தேடிச் சென்றவர் கதை, நதியானவள், காலவெளி, ஒரு கவிதை, இரவல் முகத்தவர், நிராகரிப்பு, எல்லாவற்றிலும் நீ, நோர்வேஜிய சுதந்திரதினம், பிரபஞ்சம் மொய்க்கும் நிலவு, கிரவுஞ்சப் பறவை, என் மகனின் காதலிக்கு, இதயம் எனக்குச் சொந்தமல்ல, எனது பாட்டியின் கண்கள், கடவுள்தான் காப்பாற்றவேண்டும், பாம்புகள், எழுத்தென்பது தொடர் கனவு, வேதாளம் சொல்லும் கதை, உலகினை ஒரு பந்தாக்கி அவர்கள் விளையாடத் தொடங்கினர், இயக்கம், கடவுளோடான சந்திப்பு, காத்திருப்பு, தெளிவுகள், தூரிகைத் தீ, கனத்த மிடுக்கு, அவள்கள் அப்படித்தான், பயணம், முத்தத்தின் இறகு, பெண்கள் தினம், ஆண் என்பது எருமையைப் போன்றது, என் முகம், மழை சுமந்த மேகம், வனத்தீ, பரிசுத்தமற்ற நான்,ஆட்டம், சிறுமியர் உலகு, மனம் மனம் மனம், பேரழகி, வனச்சிறுக்கி, ஒரு என்பது நீ, வீடு, நோர்வே நாடும் அமேசோன் காடும், குளிர்காலத்து இரவு, பழையோள், உடல் மனம் நிறம் ஆகிய கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Sizing Your Wagers Safely

Posts Probe Bets Conclusions To your Nuts In the Casino poker Web based poker Etiquette Inside On-line poker Smashing A top Hunl Web based poker

5 Lowest Put Casinos

Posts Tips Sign up and you will Gamble At best Low Deposit Local casino Spin Gambling establishment Ontario: Best step 1 Deposit Gambling enterprise Type