சு.தவச்செல்வன். நுவரஎலிய: பெருவிரல் இலக்கிய இயக்கம், கொட்டகலை தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, ஜுன் 2013. (கொழும்பு 13: கௌரி அச்சகம், 207, சேர். இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை). xi, 85 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-44552-07. மலையகக் கவிதைச் சூழலில் பரவலாகப் பேசப்பட்ட கவிதைத் தொகுதி. கொடகே தேசிய விருது பெற்ற நூல். கவித்துவமான படிமங்களை உருவாக்குவதில் தவச்செல்வனின் ஆற்றலை இக்கவிதைத் தொகுதி சிறப்பாக வெளிப்படுத்துகின்றது. “தவச்செல்வனின் கவிதைகள் பற்றிச் சில வரிகள்” என்ற தலைப்பில் பேராசிரியர். சி.சிவசேகரம் அவர்களின் அறிமுகவுரையுடன், “கவிதை வெளியில் கால் ஊன்றும்போது” என்ற தலைப்பில் சு.தவச்செல்வனின் என்னுரையும் இந் நூலின் நுழைவாயிலாகின்றன. உள்ளே அவரது தேர்ந்த கவிதைகளான சாய்மனை, சிறுமியின் பாடல், காலத்தை சுமக்கும் கூடை, இரவில் உலாவும் நாய்கள், பூனூலும் சவரக்கத்தியும், வெண்மையாகும் கரும்புள்ளிகள், இருத்தலும் பறத்தலும், சூரியன் தீட்டும் ஓவியம், பொம்மைக் காதல், குப்பைத் தோட்டி, செங்காற்று, நட்பின் நிழல், அகிலத்தின் பிரம்மன்கள், இறந்தகாலமும் நிகழ்காலமும், சிவப்பு நிற தேயிலைச் சிட்டு, நிர்வாண வெளி, டிராகுலாக்கள், நொறுங்கிய பழங்கண்ணாடி குறித்து, முற்றத்தில் வாழும் தூசுக்கள், மெல்ல நுழைதல், அடுத்த நூற்றாண்டில் நான் தொலைத்தவை, உன்னருகில் ஓர் உயிர், இயல்புப் புணர்ச்சி, தேவியின் தனிமை, புதைமேட்டில் பூக்கும் செவ்வரத்தம் பூக்கள், உணர்ச்சி பூக்கும் அடையாளங்கள், மரங்கள் பேசுகின்றன, பசுமை வார்க்கும் கரங்கள், மலைப்புறக் கழுகுகள், சிவப்பு பற்றி, முடிந்த கதையின் படிமங்கள், தலையிழந்த பனந்தோப்பு, போர்க்கால இரவுகள், முற்றத்துக் கோழிகள், தொலையும் தேசம்,மீட்சி, சுனாமி, எச்ச வினைகள், விழிப்பு, வாழ்வுக் கோலம், சித்திரம், ஜூலை சுவடுகள், மா விருட்சம், உனது ஏழு அற்புதங்கள், தபுதாரப் பிரயத்தனம், தேர்தல் விண்ணப்பம், விண்மீன்கள் உருவான கதை, நிகழ்கால மாயை, ஒரு நதியின் வாழ்க்கைப் பயணம், பத்து தலை(முறை), இராவணன், உனது அதிசயக் கண்கள், சிவப்பு டைனோசர்கள், கூடு கலைப்பு, வைகறையில் ஒலிக்கும் விடுதலைப் பாடல், ஆராய்ச்சி, நானும் நீயும் மண்ணும், இதயச் செடி, இரவுச் சிறை என்பன இடம்பெற்றுள்ளன.