14606 சிறு கீற்று (கவிதைகள்).

தாரணி இந்திரச்செல்வன். நுவரெலியா: வேலு இந்திரச்செல்வன், அலகல தோட்டம், 1வது பதிப்பு, ஜுன் 2011. (கொழும்பு 6: Fast Printers, 289-1/2 காலி வீதி, வெள்ளவத்தை). 44 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. மலையகத்தைச் சேர்ந்த வேலு இந்திரச் செல்வன்-தாரணி துரைராஜ் திருமண வாழ்வில் இணையும் வேளை முதல் பிரசவமாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்கள். வாழ்வை ஆரம்பிக்கும்போதே சமூகத்திற்காக வாழ்வோம் என்று அவர்கள் கவிதை மூலம் பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள். வேலு இந்திரச் செல்வன் அலகல தோட்டத்தைச் சேர்ந்தவர். க.பொ.த.உயர்தரத்துடன் ஆசிரியராகி கொட்டகல ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியைப் பெற்றவர். நு/வ/ரிலாமுல்ல தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். சென் லெனாட்ஸ் தோட்டத்தினைச் சேர்ந்த தாரணி சென்லெனாட்ஸ் தமிழ் வித்தியாலயம், ராகலை தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கற்று வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியில் ஆசிரியக் கல்வியைப் பெற்றவர். இவர் நு/ஹ/எலமுல்ல தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

14359 சிந்தனை தொகுதி Xiii, இதழ் 2.(ஜுலை 2000).

சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் (இதழாசிரியர்), கே.சிவானந்தமூர்த்தி (இணை ஆசிரியர்), ஏ.எஸ்.சூசை (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2003. (யாழ்ப்பாணம்: எஸ்.எஸ்.ஆர். கொம்பியூட்டர் அன் ஓப்செட் பிரின்டர்ஸ், 537 சிவன்கோவில்

Novomatic Ports Online

Articles Deciphering The book Out of Ra Miracle Extra Has Publication Away from Ra Wonders Rtp Book From Ra Miracle Evaluation Play Cash Partnership Around

Harmful Charm Casino slot games

Blogs Conclusion To possess 3d Slots Awesome Pan Gambling Publication Canada Must i Cheating The newest Rng To your Slot machines? Should i Earn Real

14717 மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்.

சர்மிலா வினோதினி. வவுனியா: பூவரசி வெளியீடு, 371, மதவடி ஒழுங்கை, மன்னார் வீதி, வேப்பங்குளம், 1வது பதிப்பு, டிசம்பர் 2018. (வவுனியா: பூவரசி வெளியீடு, மன்னார் வீதி, வேப்பங்குளம்). 108 பக்கம், விலை: ரூபா