14609 சுவாசம் மட்டுமே சுடுகலனாய்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா (இயற்பெயர்: லதா கந்தையா). கிளிநொச்சி: லதா கந்தையா, 1வது பதிப்பு, பெப்ரவரி 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி). xxvi, 98 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ. கரடிப்போக்கு கிராமத்தைச் சேர்ந்த கந்தையா-நாகம்மா தம்பதியினருக்கு ஏக புத்திரியாக 1979.04.24 இல் பிறந்தவர் வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா. தனது ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி சென் திரேசா மகளிர் கல்லூரியில் பெற்றவர். எறிகணை வீச்சில் பெற்றோர்களை 1986 இல் இழந்தபின் செஞ்சோலை இல்லத்தில் பராமரிக்கப்பட்டவர். அங்கிருந்து உயர் கல்வியை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் கற்று, சட்டமும் பயின்று கலைமானி பட்டமும் பெற்றவர். மூன்று பிள்ளைகளுக்கு தாயான இவர் இறுதி 2009 யுத்தத்தில் தனது இரண்டரை வயது மகனையும் இழந்திருந்தார். தான் வளர்ந்த செஞ்சோலையிலேயே ஆசிரியராகப் பணியாற்றிய இவருக்கு தலைவரால் வழங்கப்பெற்ற பெயர் சஞ்சிகா என்பதாகும். அதனையே தன் புனைபெயராகக் கொண்டு ஊடகத்திலும் எழுத்துத் துறையிலும் கால் பதித்தார். “விடுதலைக் கனல்”, என்ற கவிதை நூலை 15 ஆவது வயதிலும் “சுவாசம் மட்டுமே சுடுகலனாய்…” என்ற கவிதை நூலை போர் முடிந்த பின்பு 2018 இலும் வெளியிட்டுள்ளார். தன் மன உணர்வுகளின் தொகுப்புத்தான் சுவாசம் மட்டுமே சுடுகலனாய்… என்ற கவிதைப் புத்தகம் என்று கூறும் இக்கவிஞர் அரசியல், காதல், விரக்தி, ஏளனம் போன்ற பல்வேறுபட்ட உணர்வுகளை உள்ளடக்கிய கவிதைகளைக் கொண்டதாக இதனை வெளியிட்டுள்ளார். நீதியின் குரலாய், இயலாமையின் குரலாய், ஏக்கத்தின் குரலாய், விரக்தியின் குரலாய் இவரது 77 கவிதைகளும் வாசகருடன் பேசுகின்றன.

ஏனைய பதிவுகள்

A real income No-deposit Harbors

Content Golden goddess pokie free spins: Incentive Password: Cashfree20 No-deposit Position Sites British 30 Inside Incentives, 30 Free Revolves Better Slot For An excellent ten