ஓ.ஏ.வேலுசாமி. பண்டாரவளை: ஏ.தியாகலிங்கம், தலைவர், தமிழ் இலக்கியப் பேரவை (ஊவா), 282/11A, பதுளை வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (பண்டாரவளை: W.A.S.அச்சகம்). xiv, 77 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955- 43885-0-5. மலையகத்தின் “சிவப்புச்” சிந்தனைக் கவிஞராக அறியப்பட்டவர் ஓ.ஏ.வேலுசாமி. இவரது கவிதைகள் கற்பனை நிழலையும் காதலையும் பாடியதைவிட, அதிகமாக மலையக மக்களின் வாழ்வியலையும், தன்னுடனிருந்த-நலிவுற்ற உறவுகளையும், அடிமைத் தனத்தையும் பாடியதே அதிகமாகும். இத்தொகுதியிலுள்ள 50 கவிதைகளும் ஒருபிடி மண், என்ன உலகமடா?, சிறப்பிக்கோர் செந்நாள், விழிகளில் மிதந்த முத்து, அடுத்த நெர, அன்பின் மலரே, இதயத்தில் இவள், குருதிச் சிதறல், இதுவா உலகம், விடிவைத் தேடி, தலைவிதி மாறுமோ?, சாயத்தண்ணி, ஓணான் உடலில் உதிர்ந்த இரத்தம், வாழ்வதைப் பார், மலையக வாழ்வு, பெண்கள் உலகின் கண்கள், நல்லவுங்க நாலுபேர், ஒப்பந்தக் கொடுமை, மாறாத காதல் சுவை, புள்ளி போட்ட பெட்டி, இதயம் எங்கே?, கைக்குழந்தை தெருவிலே கவனித்தோர் மண்ணிலே, வாழவிடு, மிஞ்சியது, படிச்சவன் கிழிச்சது என்ன?, நல்ல தமிழ் நாலெழுத்து, மறு ஜென்மம் வேண்டும், அலையும் மலையும், தட்டிப் பார் கட்டிப் பாலை, திரும்பிப் பாரம்மா, என்னுயிரில் அவள், மண்ணுலகில் என்ன விலை, முகிலுக்குள் முத்தமிர்தம், விதைத்ததை அறுத்தான், ஊருக்குப் பெரிசு யாருக்கு இலாபம்?, கரை சேரா கண்ணீர், நினைவலைகள், நிலைமாறா நெஞ்சங்கள், உயிருள்ளவரை ஓடும் இரத்தம், நிலையற்ற நெஞ்சங்கள், சொர்க்கத்தின் வாயில் வரை, போய்விடு புது இடம் தேடி, வாழ்வு ஒரு வானவில், உன் கையில் என்னுயிர், சிலை கூறும் சிற்பங்கள், மண் மீது நீ ஒருவன், எது இனிது, முதலும் முடிவும், உயிர் கொடுத்த உத்தமி, ஏனிந்த வாழ்க்கை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.