14614 திணை மயக்கம் அல்லது நெஞ்சொடு கிளர்தல்.

சேரன். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (சென்னை: 600017: சுதர்சன் கிராப்பிக்ஸ்). 112 பக்கம், விலை: இந்திய ரூபா 125., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-5244- 116-7. கனடாவின் வின்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானிடவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் சேரன், ஈழத்தின் “மகாகவி” உருத்திரமூர்த்தியின் மகனாவார். சேரனின் “இருவருக்கிடையிலும் ஒரு பெரும் பாலை” தொடங்கி “வீடு திரும்புகிறேன்” என்ற கவிதை ஈறாக, தேர்ந்த 100 கவிதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது. “சேரனின் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் திணை மயக்கமாகவும், நெஞ்சொடு போரிடுவனவாகவும் உள்ளன. மிக ஆழமான கருத்துச் செறிவுள்ள கவிதைகள். இக்கவிதைகளில் அகமும் புறமும் பிரிய இயலாத நிறங்களின் திணைகளாக விரிகின்றன. அரேபியக் கவிதை வடிவமான கஜல், பசவண்ணாவின் வசனங்கள் ஆகியவற்றையும் நினைவுபடுத்தும் இக்கவிதைகள் மெல்லிய இசையைத் தூவுகின்றன. காமம், அகதிநிலை, போர், காதல், சஞ்சலம், வன்முறை, பிரிவின் வெளி என வியப்பூட்டும் நவீன உள்ளார்ந்த பார்வையை இவை வெளிப்படுத்துகின்றன”. (பின்னட்டைக் குறிப்பு).

ஏனைய பதிவுகள்

12966 – பண்டைய ஈழம்: இரண்டாம் பாகம்: பொலன்னறுவைக் காலமும் பிந்திய காலங்களும்.

வே.க.நடராசா. யாழ்ப்பாணம்: சேது நூலக வெளியீடு, கேவளை, கரவெட்டி, 3வது திருத்திய பதிப்பு, மாசி 1973. (யாழ்ப்பாணம்: தமிழ்ப் பூங்கா அச்சகம், நெல்லியடி-கரவெட்டி). viii, (24), 218 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா

12437 – விழி 1994.

வீரவாகு பரஞ்சோதி (இதழாசிரியர்). வவுனியா: தேசிய கல்வி நிறுவனம்- பிரதேச நிலையம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், வவுனியா தென் கல்வி வலயம், கண்டி வீதி, 1வது பதிப்பு, 1994. (அச்சக விபரம்