14617 துளிர் விடும் அரும்பு: கவிதைகள்.

வேலணையூர் என்.கண்ணதாஸ். வேலணை: கலை இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2015. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xii, 51 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-42729-0-3. தன் மாணவப் பருவத்தில், 2002இலிருந்து தன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர் நடராஜா கண்ணதாஸ். இவர் எழுதிய “இளஞ் சிறகுகள்” என்ற பல்சுவை அம்சங்களைக் கொண்ட நூல் 2002இலும், “பொது அறிவு” நூல் 2003இலும், “மலரும் மலர்கள்” என்ற சிறுகதை நூல் 2004இலும் வெளிவந்தன. இவரது நான்காவது நூலாக வெளிவரும் இக்கவிதைத் தொகுதி வரம் ஒன்று வேண்டும் உனை வாயாரப் போற்ற, விடியுமா எனது பொழுது?, ஆச்சரியம், உன்னால் முடியும், கானல் நீர், ஏன் இந்தப் பாசாங்கு, பூசைகள் புதுவிதம், மா(ற்) றிய சமூகம், இறுதி நிமிடம், உனக்காகக் காத்திருப்பேன், யாரோடும் பகை கொள்கிலேன், முதியோர் இல்லம், அன்புள்ள அம்மா, பசுமையான நினைவுகள், பொய், சித்திரகுப்தனிடம் சில கேள்விகள், மண்வாசனை, ஆழிப்பேரலை, அழகான எமதூர், அவல வாழ்க்கை, கலியுகம், தந்தையுள்ளம், துளிர்விடும் அரும்பு, தாலாட்டு, புத்தாண்டு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 25 கவிதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Ulisse Slot Machine Online

Content Duplice Slot Machine Popolari Casinò Con Permesso Italiani Come Offrono Ulisse: Ulisse Slot: Giochi Premio Anche Simboli Wild Addirittura Scatter Sopra un ripulito di

14287 மனித உரிமைகளைஉறுதிப்படுத்தும் பொறிமுறைகள்.

மேனகா ஹேரத், க.கபிலன் வில்லவராஜன். கொழும்பு 8: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல. 165, கின்சி வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 9: மெனிக் அச்சகம், 161, தெமட்டகொட வீதி). iv,