14625 நிலா நாழிகை.

வேலணையூர் ரஜிந்தன் (இயற்பெயர்: பாலசுந்தரம் ரஜிந்தன்). வேலணை: பாலசுந்தரம் ரஜிந்தன், 4ம் வட்டாரம், வேலணை கிழக்கு, 1வது பதிப்பு, ஒக்டோபர், 2018. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). 110 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-71331-0-2. விசேட கல்வி ஆசிரியரான பாலசுந்தரம் ரஜிந்தன், ஈழத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை என்ற ஊரில் பிறந்து வேலணையூர் ரஜிந்தன் எனும் பெயரில் கவி படைத்து வருகின்றார். கவி ஆர்வம் கவித்துவம் பல காலமாக தன்னுள் அடைபட்டுக் கிடந்தாலும் கடந்த சில வருடங்களாக கவிதைத் துறையில் கலைஞனாக வலம் வரும் வேலணையூர் ரஜிந்தன் யாழ்.இலக்கிய குவியத்தினுடாக சமூகத்தில் கவிதை நிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதோடு, வேலணை துறையூர் கலை இலக்கிய வட்டத்தின் தலைவராகவும் இளைய தலைமுறையினரை ஊக்குவித்தும் வருகின்றார். நிலா நாழிகை என்ற இந்நூல், காதல் சார்பான ஒருதலைக் காதல், இரு மனம் இணைந்த காதல், காதலின் இன்பம், துன்பம், பிரிவு என்ற இன்னோரன்ன விடயங்களை சுவைபடக் கூறும் கவிதைகளின் தொகுதியாகும். இவரது கவிதைகளுக்கான கரு சமூகப் பிரச்சினைகள் மட்டுமல்லாது நெஞ்சைத் தொடும் முக்கிய விடயங்களையும் உள்ளடக்கியே உருவாகின்றன. அந்த வகையில் கரு இரண்டு வகைகளில் உருவாகின்றன ஒன்று உள்ளதை உள்ளபடி கவிநயத்துடன் பதிவு செய்வது, மற்றயது பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும் கரு. இக்கவிதைத் தொகுதியில் இவை இரண்டையுமே காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்