இ.சு.முரளிதரன். யாழ்ப்பாணம்: மேதினிகா வெளியீடு, 34/3, செட்டித் தெரு, நல்லூர், 1வது பதிப்பு, மே 2007. (கொழும்பு 13: ஈ-குவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). (12), 39 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 18×12 சமீ. அக்கினிக் குஞ்சொன்றை அன்றொருநாள் காட்டிடைப் பொந்தில் வைத்து காடே பொசுங்கியதைக் கண்டார் பாரதி. இங்கு அறுபது அக்கினிக் குஞ்சுகளை மனிதக் காட்டின் மனமெனும் பொந்துகளுள் கவிஞர் முரளிதரன் ஹைக்கூ கவிதைகளாகப் பதியம் வைத்திருக்கிறார். யாழ்பாணத்தின் வடமராட்சியினை பிறப்பிடமாகவும் நல்லூரை வசிப்பிடமாக கொண்ட இவர் கவிஞர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர், சினிமா விமர்சகர், சஞ்சிகையாளர் என விரிந்து செல்லும் ஆளுமைகளுக்குச் சொந்தக்காரர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் கற்றுத்தேர்ந்து பட்டதாரியான இவர், தற்போது ஹாட்லிக் கல்லூரியில் தமிழ் கற்பித்து வருகிறார். இவர் ஏகலைவன் என்னும் சஞ்சிகையின் 7 இதழ்களை வெளியிட்டுமுள்ளார்.