வட வரணி சி.சபா. கொடிகாமம்: நதியோர நாணல்கள்- கலை இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: சிவகஜன் பதிப்பகம்). (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. கொடிகாமம் வரணி வடக்கைச் சேர்ந்தவர் கவிஞர் சி.சபா. அவர் அவ்வப்போது ஊடகங்களில் எழுதியிருந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இரவில் கேட்கும் பாடலில் தொடங்கி, பகலில் காணும் கனவுகள் ஈறாக இவரது 40 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
14385 வணிகத் துளிர் ; 2002. தர்ஷனி கதிரேசன், பிரிசில்லா சுகந்தி இம்மானுவேல் (இதழாசிரியர்கள்).
கொழும்பு 4: வர்த்தக மாணவர் மன்றம், இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி, 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 6: E.S.Printers, 257,-1E, வெள்ளவத்தை). 110 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.