ஏ.சீ.எம். இப்றாஹீம். கிண்ணியா 4: பேனா பதிப்பக வெளியீடு, 118, நகரசபை வீதி, 1வது பதிப்பு, 2018. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 83 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-0932-30-6. யாப்பிலக்கண சூத்திரங்களைப் பின்பற்றி சமகாலத்தில் தரமான கவிதைகளைத் தந்துகொண்டிருக்கும் ஒரு முதிய இளைஞனாக, தனித்துவமான மரபுக் கவிஞராக அல்-ஹாஜ் ஏ.சீ.எம். இப்றாஹீம் நம்மிடையே இயங்கிவருகின்றார். பிறந்த மண்ணிலும் கடல்கடந்தும் ஓடியாடித் தொழில்புரிந்து தான் பெற்ற அனுபவங்களின் நிதர்சன நிகழ்வுகளின் வெளிப்பாடுகளாகவும் இதிலுள்ள கவிதைகள் அமைந்துள்ளன. இந்நூலில் இடம்பெற்றுள்ள நாற்பது கவிதைகளும் ஒட்டு மொத்தமாக மனித விழுமியம், வாழ்க்கைநெறி, அனுபவப் பகிர்வு, ஆன்மீகம் என்பவற்றையே பாடுபொருளாகக் கொண்டு கவித்துவப் புலமையுடன் படைக்கப்பெற்றுள்ளன. இதில் 12 கவிதைகள் இஸ்லாமிய மார்க்க விடயங்களைப் பற்றியதாக உள்ளன. தான் பிறந்த மண்ணான கிண்ணியாவின் எழிலையும் முஸ்லீம்கள் செறிந்துவாழும் காத்தான்குடியைப் பற்றியும் பெருமைப்பட்டு சிறப்பான வகையில் சில கவிதைகளையும் இங்கு வடித்துள்ளார். இவர் இலங்கை அரசாங்கத்தின் இராஜதந்திர சேவையில் இணைந்து, சீனக்குடியரசின் தலைநகரிலும், தாய்லாந்து, சவூதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சேவையாற்றிய இவர், கலாபூஷணம், வித்தகர் விருது போன்ற இலக்கியப் பூடணங்களாலும் பொலிவூட்டப்பெற்றவர்.
12923 – அமரர் உயர்திரு சு.பற்குணம்: நினைவு மலர்.
மலர்க் குழு. கொழும்பு 4: பழைய மாணவர் சங்கம், இந்துக் கல்லூரி, இல.77, லோரன்ஸ் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை). (36) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: