மீரா குகன். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×11 சமீ., ISBN: 978-955-4096-02-8. ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தும் தாயக நினைவுகளுடன் வாழும் உறவொன்றின் பறவையாய் மாறிய பறப்புகளே இந்தக் கவிதைகள். மீரா குகன், ஈழத்துப் படைப்பாளி. கொழும்பு-பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மடம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவி. வர்த்தக முகாமைத்துவ பாடநெறியை நிறைவுசெய்து ஹட்டன் நெஷனல் வங்கியில் சிலகாலம் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து ஜேர்மன் தேசம் சென்றபின்னர் ஜேர்மன்-தமிழ் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் “வெற்றி” நிறுவனத்தின் பகுதிநேர செயற்பாட்டாளராகவும், இணையத்தள நிர்வகிப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. காதலும், தத்துவமும், சமூகப் பிரச்சினைகளும், விடியல் நமக்கு வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுமாக இக்கவிதைகள் விரிகின்றன.