14635 பறவையாய் அவளை மாற்றிப் பார்ப்போமா?.

மீரா குகன். முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xii, 88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×11 சமீ., ISBN: 978-955-4096-02-8. ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தும் தாயக நினைவுகளுடன் வாழும் உறவொன்றின் பறவையாய் மாறிய பறப்புகளே இந்தக் கவிதைகள். மீரா குகன், ஈழத்துப் படைப்பாளி. கொழும்பு-பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மடம், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவி. வர்த்தக முகாமைத்துவ பாடநெறியை நிறைவுசெய்து ஹட்டன் நெஷனல் வங்கியில் சிலகாலம் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து ஜேர்மன் தேசம் சென்றபின்னர் ஜேர்மன்-தமிழ் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றுகின்றார். அமெரிக்காவை தளமாகக் கொண்டியங்கும் “வெற்றி” நிறுவனத்தின் பகுதிநேர செயற்பாட்டாளராகவும், இணையத்தள நிர்வகிப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றுகிறார். இது இவரது முதலாவது கவிதைத் தொகுதி. காதலும், தத்துவமும், சமூகப் பிரச்சினைகளும், விடியல் நமக்கு வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளுமாக இக்கவிதைகள் விரிகின்றன.

ஏனைய பதிவுகள்

14607 சிறையில் இருந்து மடல்கள்.

மாயன் (இயற்பெயர்: இரா.சிறீஞானேஸ்வரன்). திருக்கோணமலை: இரா. சிறீஞானேஸ்வரன், 159A, கடல்முக வீதி, 1வது பதிப்பு, ஜூலை 2016. (திருக்கோணமலை: சிறீராம் அச்சகம், 159A, கடல்முக வீதி). 106 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5

Spielothektricks Com

Content wie gleichfalls Erkenne Ich Das Unseriöses Verbunden Spielsaal? Tipps Und Tricks Je Spielautomaten Welches Werden Jackpots? Wir im griff haben uns glauben, so sera

12136 – சிவஸஹஸ்ரநாமார்ச்சனை.

ஸ்ரீ முருகேசு ஞானப்பிரகாசம் (மூலம்), சிற்றம்பலம் முருகவேள் (கருத்தும் குறிப்பும்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 340,352, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, வைகாசி 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 124 பக்கம்,