14639 பூகம்பப் பூக்கள்(கவிதைத் தொகுப்பு).

ச.வே.பஞ்சாட்சரம். கிளிநொச்சி: சி.மகேந்திரன், நிர்வாகி, ஆதவன் கல்வி நிலையம், இல. 65, ஸ்கந்தபுரம், 1வது பதிப்பு, சித்திரை 2000. (கிளிநொச்சி: கன்னிநிலம் பதிப்பகம், ஸ்கந்தபுரம்). x, 26 பக்கம், விலை: ரூபா 40.00, அளவு: 20.5×14.5 சமீ. விடுதலை போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில் படிப்பவர்களின் நரம்புகளில் சூடேற்றும், நெஞ்சங்களில் சிலிர்ப்பூட்டும் பாடல்களைக் காலத்தின் குரலாக, காலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் படைப்பாக ஆதவன் கல்வி நிலையத்தின் உதவியுடன் கவிஞர் ச.வே.ப. அவர்கள், 2000ம் ஆண்டு சித்திரை மாதத்தில் இப்படைப்பை நூலாக வெளியிட்டார். கவிஞர் அவர்கள் மரபிலக்கியத்தில் ஊறித் திளைத்தவர். ஆனாலும் நவீன இலக்கியத்தை மறுதலிப்பவர் அல்லர். அவரும் தனது கவிதைக்குள் நவீன உத்திகளையும் புதுமைகளையும் புகுத்தி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறுடைய தமிழ் கவிதை மரபினையும் மீறாமல் கவிதை வடிப்பதில் வல்லவர். சிந்து, குறள், வெண்பா போன்ற யாப்பு வடிவங்களில் இயற்றப்பட்டவை இக்குறும்பாக்கள். அத்தோடு பண்டிதர் அவர்கள் பல்வேறு சமுக, அரசியல் செய்திகளையும் மிகவும் சுவைபட இப்பாக்களில் விதைத்துப் பரிமாறியுள்ளார். இந்நூலில் 100 குறும்பாக்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்